கதறி அழும் டிரம்ப்.. 175 பில்லியன் டாலர் Refund.. இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்..?

அமெரிக்க உச்சநீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி உத்தரவை ரத்து செய்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வரி தொடர்பாக எழுந்த வழக்கு விசாரணையில் 6-3 வாக்கெடுப்பில் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் இறுதி தீர்ப்பை அறிவித்தார்.

இந்த தீர்ப்பில் 1977 சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் டிரம்ப் தனது அதிகாரம் மீறியுள்ளார் என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளார்.

 கதறி அழும் டிரம்ப்.. 175 பில்லியன் டாலர் Refund.. இந்தியாவுக்கு எவ்வளவு கிடைக்கும்..?

175 பில்லியன் டாலர் ரீஃபண்ட் அச்சம்
இந்த தீர்ப்பால் டிரம்ப் அரசு IEEPA சட்டத்தின் கீழ் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி மூலம் வசூலித்த 175 பில்லியன் டாலர் மதிப்பிலான வரி தொகையை உலக நாடுகளுக்கு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கலாம் என்று பென் வார்டன் பட்ஜெட் மாடல் அமைப்பின் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பென் வார்டன் பட்ஜெட் மாடல் அமைப்பின் மூத்த பொருளாதார வல்லுநர் லிஸ்ல் போலர், சுமார் 11,000 பொருட்கள் மற்றும் 233 நாடுகளின் இறக்குமதி தரவுகளை ஒப்பிட்டு இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 2025 முதல் IEEPA வரிகள் மூலம் 179 பில்லியன் டாலர் வசூலிக்கப்பட்டுள்ளதாக போலர் கூறியுள்ளார்.

இத்தொகை திரும்பச் செலுத்தப்பட வேண்டியிருந்தால், அது 2025 நிதியாண்டில் போக்குவரத்து அமைச்சகத்தின் (127.6 பில்லியன் டாலர்) மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் (44.9 பில்லியன் டாலர்) இணைந்த பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும். டிசம்பர் 2025 மாத நடுப்பகுதி வரையில் வரை சுங்கத் தரவுகளின்படி 174.49 பில்லியன் டாலர் வசூலாகியுள்ளது, இது 2025-2026 நிதியாண்டுகளின் மொத்த வரி வருவாயில் சுமார் 70% ஆகும்.

இந்த ரெசிப்ரோக்கல் வரி மூலம் அமெரிக்க அரசின் தினசரி வருவாயை 500 மில்லியன் டாலராக மதிப்பிட்டுள்ளது. இத்தகைய பெருந்தொகை ரீஃபண்ட் அமெரிக்க அரசுக்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியில் பெரும் சவாலாக அமையும்.

அமெரிக்காவின் டிரம்ப் அரசு வழக்கின் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதிக்கு பின்பு ரெசிப்ரோக்கல் வரி வசூல் அளவை வெளியிடவில்லை. BBC அறிக்கையின்படி ரீஃபண்ட் தொகை 130 பில்லியன் டாலருக்கும் மேல் இருக்கலாம் என ஜனவரி மாதம் தெரிவித்தது. இது டிரம்பின் இரண்டாவது ஆட்சியின் முக்கிய வர்த்தக கொள்கைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

மேலும் முழுதொகை மற்றும் நாடுகள் வாரியான பங்கீட்டை இதுவரையில் அமெரிக்க அரசு வெளியிடாத காரணத்தால் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய முழு பங்கு குறித்த விபரம் தெரியவில்லை.

நீதிமன்ற தீர்ப்பு
அமெரிக்க உயர் நீதிமன்றம் இந்த முக்கியமான தீர்ப்பை பல கட்ட ஆய்வுகள், விசாரணைக்கு பின்பு அமெரிக்க அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் IEEPA சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் தனிப்பட்ட முறையில் வரியை விதிக்க எவ்விதமான உரிமையும் இல்லை.

இதேவேளையில் அமெரிக்க காங்கிரஸ் அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனேட் அடங்கிய குழு IEEPA சட்டத்தின் கீழ் "வரிகள், கட்டணங்கள், இறக்குமதி வரிகள் வசூலிக்கும் அதிகாரம் உள்ளது" என்று அரசியலமைப்பு கூறுகிறது என நீதிபதி தெளிவாக குறிப்பிட்டார்.

அவசர நிலை என்ற பெயரில் அரசியலமைப்பின் அதிகாரத்தை மீற முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். மேலும் IEEPA சட்டத்தின் கீழ் போர் அச்சம், அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சறுத்தல் இருந்தால் மட்டுமே இத்தகைய வரி அமெரிக்க காங்கிரஸ் வாயிலாக வரியை விதிக்க முடியும்.

"அமெரிக்கா உலகின் அனைத்து நாடுகளுடனும் போரில் இல்லை, இதேபோல் அமெரிக்க காங்கிரஸ் மூலம் வரி விதிக்காமல் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி இந்த ரெசிப்ரோக்கல் வரியை விதித்துள்ளார்" என்று தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை என தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஏற்றுமதியாளர்களும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். டிரம்ப் வரிகள் இந்திய ஏற்றுமதியை பாதித்தன, குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்லும் ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மோட்டார்கள், கெமிக்கல் போன்றவற்றின் செலவு உயர்ந்தது. இந்த ரத்து தமிழ்நாட்டு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும். குறிப்பாக திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு இந்த ரெசிப்ரோக்கல் வரி மூலம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+