அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த அக்டோபர், நவம்பர் காலத்தில் பெரிய அளவில் நிதி முதலீடுகளை செய்துள்ளார். இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், அவர் வாங்கிய பத்திரங்களில், தனது அதிபர் பதவிக் காலத்தில் தான் கொண்டு வந்த கொள்கைகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலனடைந்த நிறுவனங்களின் பத்திரங்களும் அடங்கும்.
அமெரிக்க அரசாங்க நெறிமுறைகள் அலுவலகம் (OGE) வெளியிட்டுள்ள புதிய தகவல்களின்படி, டொனால்ட் டிரம்ப் குறைந்தது 82 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.680 கோடிக்கு மேல்) மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த முதலீடுகளில் நெட்ஃபிக்ஸ், போயிங், மெட்டா (ஃபேஸ்புக்), ஹோம் டிப்போ மற்றும் இன்டெல் போன்ற உலகின் பெரிய நிறுவனங்களின் பத்திரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, அமெரிக்க நகரங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் நகராட்சிப் பத்திரங்களையும் அவர் வாங்கியுள்ளார். இந்த விவரங்கள், அரசாங்கத்தின் பணிநிறுத்தம் முடிந்த பிறகு OGE ஆல் வெளியிடப்பட்டுள்ளன.

அரசியல் நெறிமுறைகளை மீறிய முதலீடுகள் : அமெரிக்க சட்டப்படி, பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், பங்கு வர்த்தகம் செய்யும்போது, அவர்கள் செய்யும் பரிவர்த்தனைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். முந்தைய அதிபர்களை போல இல்லாமல், டிரம்ப் தனது சொத்துக்களை ஒரு சுயாதீனமான Blind Trust மாற்றவில்லை. மாறாக, அவரது வணிகங்களை அவரது மகன்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த வணிகங்கள் பல நேரங்களில் அதிபரின் கொள்கைகளுடன் நேரடியாக தொடர்புடையவை. இந்தச் சூழலில், அவர் இப்படி முதலீடு செய்வது நெறிமுறைகளுக்கு முரணானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உதாரணமாக, இன்டெல் நிறுவனத்தில் உள்நாட்டு சிப் உற்பத்தியை பாதுகாக்க வேண்டும் என்று கூறி, டிரம்ப் நிர்வாக அரசாங்கம் சார்பில் 10% பங்குகளை வாங்கியது. இந்த அரசு தலையீட்டிற்கு நிதியளித்த சட்டமும், முந்தைய அதிபர் பிடனின் நிர்வாகத்தில் உருவானது. இத்தகைய அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற நிறுவனங்களின் பத்திரங்களை டிரம்ப் வாங்கியிருப்பது, பொதுப் பதவி மற்றும் தனிப்பட்ட நிதி ஆதாயம் குறித்த சர்ச்சைக்கு வழிவகுக்கிறது.
மோசடி ஆபத்தை குறைக்கும் முயற்சி : முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் டிரம்ப் 103.7 மில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களை வாங்கியதாக அறிவித்தார். இருப்பினும், இந்த முதலீட்டு முடிவுகளை டிரம்ப்போ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ எடுக்கவில்லை என்றும், அங்கீகரிக்கப்பட்ட நிதி மேலாளர்கள் தான் எடுத்ததாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர். ஆனால், அவரது பரந்து விரிந்த வணிக சாம்ராஜ்யம் மற்றும் அவரது அரசியல் செல்வாக்கு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு, பொது வெளியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications