இந்தியர்களுக்கு டிரம்ப் கொடுத்த குட் நியூஸ்!! கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்திற்கு செல்லும் என உறுதி!!

ஈரான் போர் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இரண்டரை மாதங்களாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை செய்யப்படாமல் தடைபட்டுள்ளது. இதனால் இந்தியா, இலங்கை என ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் , எல்பிஜி விலைகளும் அதன் விளைவாக காய்கறி, பால் உள்ளிட்டவற்றின் விலைகளும் உயர்ந்துவிட்டன. ஈரான் போர் இந்திய குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே கை வைத்து விட்டது. எப்போது தான் இந்த போர் முடியும், மீண்டும் பழைய நிலைக்கு எப்போது திரும்புவோம், பெட்ரோல் மற்றும் டீசல், எல்பிஜி விலைகள் இனி குறையுமா என பல கேள்விகள் கோடிக்கணக்கான மக்கள் மனதில் இருக்கிறது.

இந்தியர்களுக்கு டிரம்ப் கொடுத்த குட் நியூஸ்!! கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்திற்கு செல்லும் என உறுதி

ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு மித்த கருத்து ஏற்படாமல் இருப்பதே இதற்கு காரணம். முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2ஆவடு கட்ட பேச்சுவார்த்தையே நடக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார். நாங்கள் மேற்காசிய போரை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வர போகிறோம்; கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரிய போகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Also Read

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம் என்றார், ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது என கூறும் டிரம்ப், இது நடந்த உடன் கச்சா எண்ணெய் விலைகள் அதலபாதாளத்திற்குச் சரிவதை நீங்கள் காணப்போகிறீர்கள். அவை நிச்சயம் குறையப் போகின்றன என்றார்.

இந்தியர்களுக்கு டிரம்ப் கொடுத்த குட் நியூஸ்!! கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்திற்கு செல்லும் என உறுதி

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளிடம் மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது; எனவே, அவற்றின் விலைகள் கடுமையாக சரியும் என குறிப்பிட்டார். ஈரான் மீது தாக்குதல் நடத்தலாமா, வேண்டாமா என முடிவெடுக்க ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. நாங்கள் அனைவரும் தயாராக இருந்தோம். ஆனால் சில நாட்டு தலைவர்கள் போரை நிறுத்துமாறு கேட்டு கொண்டதால் தற்போது தாக்குதலை ஒத்திவைத்து உள்ளேன் என தெரிவித்தார்.

Recommended For You

ஈரான் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள நான் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருந்தால் இஸ்ரேலைத் தகர்த்துவிடுவார்கள் என கூறினார். டிரம்ப் கூற்றுப்படி போர் நின்று கச்சா எண்ணெய் சப்ளை சீரானால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரியும், அது நடந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+