அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக தலைவர்களையும் பிரபலங்களையும் தனது "அமைதி வாரியம்" (Board of Peace) என்ற புதிய அமைப்பில் இணைய அழைப்பு விடுத்து வருகிறார். இந்த வாரியம் காசா போர் அப்பால் உலகளாவிய மோதல்களுக்கு தீர்வு காணும் நீண்டகால அமைப்பாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளது.
இந்த அமைதி வாரியம் முதன் முதலில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலின் காசா போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது. இந்த அமைதி வாரியம் தான் காசாவை நிர்வாகம் செய்யும் மிகப்பெரிய அமைப்பாக இருக்போகிறது.

இந்த அமைப்பு முதல் கட்டமாக போருக்கு பின்பு காசாவில் நிர்வாகம், இப்பிராந்திய உறவுகள், புனரமைப்பு, முதலீட்டு ஈர்ப்பு, பெரிய அளவிலான நிதி முதலீடு, பல்வேறு திட்டங்களுக்கான நிதி திரட்டல் ஆகியவற்றை இந்த அமைதி வாரியம் கண்காணிக்கும்.
டிரம்ப் நிர்வாகம், இந்த அமைதி வாரியத்தில் நிரந்தர இடம் விரும்பும் நாடுகளிடமிருந்து குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர் சுமார் 9000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறது. இதற்காக டிரம்ப் தற்போது முக்கியமான உலக நாடுகளுக்கும், பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது. இ
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி கனடா, அர்ஜென்டினா அதிபர்களுக்கும், சில ஐரோப்பிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவல் படி டிரம்ப் இந்த அமைப்பின் தலைவராக இருப்பார்.
இந்த குழுவில் இணைக்கும் உறுப்பினர்களை அழைப்பதும் அவரே, மேலும் இக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்படும், மேலும் ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு அளிக்கப்படும். ஆனால் அனைத்து முடிவுகளும் தலைவரின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என கட்டமைப்பில் இந்த அமைதி வாரியம் உருவாக்கப்பட உள்ளது.
டிரம்ப் இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN) மாற்று அல்லது போட்டி அமைப்பை உருவாக்க முயல்கிறார் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். டிரம்ப் நீண்ட காலமாக UN-ஐ விமர்சித்து வருவதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
More From GoodReturns

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications