உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்க போகும் டொனால்டு டிரம்ப் மிகப்பெரிய பிஸ்னஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும், தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூட பல பொருட்களை விற்பனை செய்து பெரும் தொகையைத் தேர்தல் பிரச்சார நிதியாகத் திரட்டினார்.
இந்த நிலையில் அதிபராக பதவியேற்க இரண்டு நாட்களுக்கு முன்னதாக, டொனால்ட் டிரம்ப் தனது பெயரில் அதிகாரப்பூர்வ $TRUMP என்ற பெயரில் கிரிப்டோகாயின்-ஐ அறிமுகம் செய்துள்ளார். இந்த கிரிப்டோகாயின் கிரிப்டோகரன்சி சந்தையைச் சனிக்கிழமை பெரும் புயலால் தாக்கியது போல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதிபராகப் பதவியேற்கும் டிரம்ப் தனது பிரபலத்தைப் பணமாக்கும் முயற்சியில் இதைச் செய்துள்ளார், இதை அறிமுகம் செய்யும் போது பலரும் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் டிரம்ப்-ன் சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் கிரிப்டோகாயின் வாங்குவதற்கான லிங்க் பகிரப்பட்டது. இதோடு டொனால்டு டிரம்ப் மகன் எரிக் டிரம்ப் டிவிட்டர் கணக்கிலும் இதுகுறித்த பதிவு வெளியிடப்பட்ட நிலையில் தாறுமாறாக விற்பனை ஆனது.
$TRUMP கிரிப்டோகரன்சி என்பது வெறும் மீம் காயின் தான், இது அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதிகப்படியான வர்த்தகத்தை எதிர்கொண்டது. நாணயத்தின் ஆரம்ப விலை 0.18 டாலரில் இருந்து தற்போது 69.18 டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்க நேரத்தில் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிரம்ப் காயின் தற்போது 985.46 சதவீதம் உயர்ந்து 70.48 டாலரை தொட்டுள்ளது. இதன் மூலம் டிரம்ப் காயின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 14.17 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் டொனால்டு டிரம்ப் சொத்து மதிப்பில் பல பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. மேலும் டிரம்ப் எந்த அளவுக்கு கிரிப்டோகரன்சி மீது ஆர்வமாகவும், நம்பிக்கையாகவும் உள்ளார் என்பது இதை வைத்து தெரிந்துகொள்ள முடிகிறது.

சோலானா நெட்வொர்க்கில் தொடங்கப்பட்ட இந்த $TRUMP மீம் காயின் டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் குடியரசு கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டிரம்ப் காயின் வெளியான உடன் ஒரு வர்த்தகர் 6 மில்லியன் $TRUMP நாணயங்களைத் தோராயமாக 1.1 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். சில நிமிடங்களில் இந்த முதலீடு 23 மில்லியன் டாலராக உயர்ந்தது என கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்ப்-ன் குடும்ப நிறுவனம் 1 பில்லியன் $TRUMP டோக்கன்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளது. இதில், 200 மில்லியன் நாணயங்கள் ஆரம்ப விநியோகத்திற்காக உள்ளன, மீதமுள்ள 800 மில்லியன் அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications