எல்லோரும் விளையாட்டாக பார்த்த மீம் காயினை டிரம்ப் குடும்பம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் மற்றும் நிதி கருவியாக மாற்றியுள்ளது. டிரம்ப் அதிபரான பின்பு தனது பிரபலத்தையும், பதவியை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி ரூபாயை தனிப்பட்ட முறையில் சம்பாதித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்தலில் போட்யிட துவங்கிய நாளில் இருந்து அவரது குடும்ப நிறுவனம் பல்வேறு பொருட்களை தனது ஆதாரவாளர்களுக்கு விற்பனை செய்து தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியை திரட்டியது. தேர்தலில் வென்ற பின்பு முக்கிய புள்ளிகளுக்கு விருந்து அளிப்பது மற்றும் நேருக்கு நேர் சந்திப்பது மூலம் தனியாக சம்பாதித்தார்.

இதெல்லாம் போதாதென டிரம்ப் அதிபராக பதவியேற்றி பின்பு $TRUMP என்ற மீம் காயினை (meme coin) தொடங்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதன் அறிமுக நாளிலேயே பல்லாயிரம் கோடியை சம்பாதித்த டிரம்ப் தற்போது அடுத்தக்கட்ட பிஸ்னஸ் பிளானில் இறங்கியுள்ளார்.
$TRUMP மீம் காயின் அறிமுகம் செய்யும் போது சில சென்ட் விலைக்கு சந்தைக்கு வந்தாலும், 48 மணிநேரத்தில் 72 டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் சில நாட்களில் $TRUMP காயின் மோகம் குறைந்து 8 டாலர் வரையில் குறைந்தது. இதை கண்டு சோகமடைந்த டிரம்ப் அடுத்தொரு புத்திசாலிதனமான திட்டத்தை வகுத்தார்.
$TRUMP மீம் காயினை அதிகம் வைத்துள்ளவர்களுடன் டிரம்ப் இரவு விருந்தில் கலந்துக்கொண்டு, அதில் சிலருக்கு பிரத்தியேக பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக ஒரு போட்டியும், அதற்கான விதிகளையும் வருத்தார். மே 22, 2025 அன்று ட்ரம்பின் வாஷிங்டன் பகுதி கோல்ஃப் கிளப்பில் நடைபெறவுள்ள இரவு விருந்து நடக்கிறது.
$TRUMP மீம் காயினை அதிகம் வைத்துள்ள டாப் 220 பேரை ட்ரம்புடன் இரவு விருந்தில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள்.
இதில் டாப் 25 பேருக்கு, விருந்துக்கு முன் ட்ரம்புடன் ஒரு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
டாப் நான்கு பேருக்கு 100,000 டாலர் (ரூ.84 லட்சம்) மதிப்புள்ள டிரம்ப் பிராண்ட் கைக்கடிகாரங்களைப் பரிசாகப் பெறுவார்கள். என அறிவிக்கப்பட்டது.
"உங்களிடம் எத்தனை $TRUMP காயின்கள் உள்ளது என்பதை அதிபருக்கு காட்டுங்கள்!" என்று $TRUMP காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த சிறப்பு விருந்துக்கு விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. டிரம்ப் உடன் விருந்து என்ற ஆசையில் பல பெரும் புள்ளிகள் மீம் காயினை வாங்கி போட்டியில் குதித்தனர்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, $TRUMP மீம் காயின் விலை 9 டாலரில் இருந்து 14 டாலராக உயர்ந்து, பின்னர் 11 டாலராக ஆக நிலைபெற்றது. வர்த்தக அளவும் கணிசமாக உயர்ந்தது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் $TRUMP காயினை நிர்வாகம் செய்வது டிரம்ப் குடும்பம் நிறுவனம் தான். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் யாரேனும் இந்த மீம் காயினை வாங்கினால் பரிமாற்ற கட்டணம் செலுத்த வேண்டும், இந்த தொகை நேரடியாக டிரம்ப் குடும்ப நிறுவனத்திற்கு தான் வருகிறது.
பிளாக்செயின் ஆய்வு நிறுவனமான செனாலிசிஸ் (Chainalysis) வெளியிட்டுள்ள தகவல் படி, டிரம்ப் குடும்ப நிறுவனம் சுமார் 320 மில்லியன் டாலர் அதாவது 2,688 கோடி ரூபாயை பரிமாற்ற கட்டணமாக ஈட்டியுள்ளது டிரம்ப் குடும்பம். இந்த புதிய விருந்து அறிவிப்பு வெளியான பின்பு ஒரு வாரத்தில் நடந்த வர்த்தகத்தில் மட்டும் டிரம்ப் குடும்பம் 1.3 மில்லியன் டாலர் தொகையை ஈட்டியுள்ளது.
$TRUMP காயினை பொறுத்த வரையில் விலை முக்கியமில்லை, பரிமாற்றம் தான் முக்கியம். விலை உயரவில்லை என்றாலும் ஓகே, ஆனா பரிமாற்றம் நடந்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்காக தான் இந்த திடீர் விருந்து ஏற்பாடு.
டிரம்ப் சம்ராஜ்ஜியத்தின் துணை நிறுவனமான CIC டிஜிட்டல், ஒவ்வொரு காயின் பரிமாற்றத்திலும் கட்டண தொகையை பெறுகிறது. ஒரு வர்த்தகத்திற்கு விதிக்கப்படும் கட்டணம் சிறியதாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான அளவிலான வர்த்தகங்களால் அதிக வருவாய் ஈட்டி வருகிறது.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications