அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 60 நாடுகள் மீது விதித்துள்ள ரெசிப்ரோக்கல் வரி மூலம் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதித்து வருகிறது. இப்படியிருக்கையில் சீனா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகள் அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வரியை விதிக்க தயாராகியுள்ளது. இதிலும் குறிப்பாகச் சீன வம்படியாக சரிக்குச் சரி போட்டிப்போட்டு வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு மத்தியில் வர்த்தகப் போர் முத்தியுள்ளது.
இதேவேளையில் பல நாடுகள் அமெரிக்காவின் வரி விதிப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்க அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்தியா, பங்களாதேஷ், இஸ்ரேல் உட்பட பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேசும் போது, என்னுடைய ரெசிப்ரோக்கல் வரியால் பாதிக்கப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும்போது எதையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறிவருகின்றனர் என்று கிண்டல் செய்து பேசியுள்ளார். காங்கிரஸ் காட்டிலும் தான் சிறப்பான முறையில் பேரம் பேசுவதாகக் கூறினார்.
"ரெசிப்ரோக்கல் வரியால் பாதிக்கப்பட்ட நாடுகள் நம்மிடம் கெஞ்சுகின்றன (kissing my a**). ஒப்பந்தம் செய்துகொள்ளத் துடிக்கின்றன. 'தயவு செய்து ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள் ஐயா, நான் எதையும் செய்வேன், எதையும் செய்வேன் சார்' என்று கூறுகின்றன," என்று டிரம்ப் உலக நாடுகளைக் கிண்டல் செய்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
குடியரசுக் கட்சியில் உள்ள சில கிளர்ச்சியாளர்கள் சிலர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாயிலாக உலக நாடுகள் ஒப்பந்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதை அனுமதித்திருந்தால் சீனாவுக்கு 104 சதவீத வரி விதிக்கப்பட்டிருக்காது. என்று அவர் நம்புவதாகக் கூறினார். நான் பேச்சுவார்த்தை நடத்துவது போல் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டீர்கள்" என்று டிரம்ப் பேசியுள்ளார்.
உதாரணமாகச் சீனாவை எடுத்துக்கொள்ளுங்கள், நான் பேச்சுவார்த்தை நடத்தியதால் சீனா 104 சதவீதம் செலுத்துகிறது, இதுவே காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அமெரிக்கா தான் 104 சதவீதம் வரி சீனாவுக்குச் செலுத்தியிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கிண்டல் செய்து, தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவை விரைவில் விற்றுவிடும் என்று அவர் மேலும் கூறினார்.
"நீங்கள் திவாலாகிவிடுவீர்கள் என்பதால் நாடாளுமன்றம் பேச்சுவார்த்தையை மேற்கொண்டால் அமெரிக்காவை வேகமாக விற்றுவிடுவார்கள். இன்றுதான் அதைப் பார்த்தேன். உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், 'வரிகளைப் பற்றிய பேச்சுவார்த்தையில் நாம் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று கூறினார்கள்," என்று அவர் கிண்டல் செய்தார்.
நாடாளுமன்றத்தின் பேச்சுவார்த்தைகள் சீனாவை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும் என்றும், சீனா எந்த வரியும் செலுத்த வேண்டியிருக்காது என்றும், அதற்குப் பதிலாக அமெரிக்கா அவர்களுக்கு வரி செலுத்தும் என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும், விரைவில் பார்மா துறைக்குப் பெரிய அளவிலான வரிகளை அறிவிக்கவுள்ளதாகவும் டிரம்ப் தனது நாடாளுமன்ற பேச்சில் தெரிவித்தார்.
"விரைவில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துவ பொருட்களுக்கு வரி விதிக்கப்படும், ஏனெனில் நாம் நம் நாட்டு மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அவை வேறொரு நாட்டில் தயாரிக்கப்பட்டு, அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதேபோல் வெளிநாட்டில் ஒரு டாலருக்கு விற்கப்படும் மருந்துக்கள் அமெரிக்காவில் 10 டாலர் அல்லது அதற்கு மேல் விற்கப்படுகிறது.
மருந்துப் பொருட்களுக்கு நாம் வரி விதிக்கும்போது நிறுவனங்கள் விலை குறைத்து டீலிங் பேச வருவார்கள். நமக்கு இருக்கும் சாதகமான அம்சம் என்னவென்றால், அமெரிக்கா மிகப்பெரிய சந்தை. இதனால் அமெரிக்க சந்தையை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள் என்று டிரம்ப் கூறினார். டிரம்ப்பின் இந்த பேச்சு, சர்வதேச வர்த்தக உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications