அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை வாஷிங்டனில் சந்திக்க உள்ளார். இருவருக்கும் மத்தியிலான சந்திப்பில் வரி விதிப்பு, இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக உறவு, ஏற்றுமதி - இறக்குமதியில் இணக்கம், டாலர் பயன்பாடு, அமெரிக்காவில் முறையாக ஆவணம் இல்லாமல் குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பான பல விஷயங்களைப் பேச உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்பு டொனால்ட் டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி இருவரும் ஒன்றாகச் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

மோடி 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது அப்போதைய அதிபர் ஜோ பிடனுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார், இதைத் தொடர்ந்து இப்போது டொனால் டிரம்ப் உடன் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். மோடி பொதுவாகச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்வது கிடையாது, கலந்துகொண்டாலும் கேள்விகள் எதிர்கொள்ளமாட்டார். ஆனால் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் அவ்வப்போது நேர்காணல்களை நடத்துவார். ஆனால் ஊடகங்களிடம் இருந்து கேள்விகளை எதிர்கொள்வது என்பது அரிதானது.
2014 இல் பிரதமரான பிறகு அவர் இந்தியாவில் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை. மே 2019 இல் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார் ஆனால் அதில் எந்த கேள்வியும் எதிர்கொண்டு பதில் கூறவில்லை.
டிரம்ப் - மோடியின் செய்தியாளர் சந்திப்பு இந்திய நேரப்படி நள்ளிரவு 3.30 (2200 GMT) மணிக்கு நடக்க உள்ளது.
நரேந்திர மோடியை டொனால்டு டிரம்ப் சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு மர்மமான சமூக வலைத்தள பதிவை வெளியீடு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். குறிப்பாக இந்திய மக்களுக்கும், இந்திய முதலீட்டாளர்களுக்கும் இந்த பதிவால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
டொனால்டு டிரம்ப் தனது பதிவில், " அதிபராகப் பொறுப்பேற்று மூன்று சிறந்த வாரங்கள் முடிந்துள்ளது, எப்போதும் இல்லாத சிறந்த நாள், முக்கிய நாள் இன்று: ரெசிப்பரோக்கல் வரிகள்!!! அமெரிக்காவை மீண்டும் சிறப்பான நாடாக மாற்றப்போகிறோம் !!!" என்று பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!



Click it and Unblock the Notifications