அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்றதில் இருந்து, விசா மீது கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவுக்கு விசா கிடைப்பதில் பெரும் போராட்டமும், போட்டியும் இருக்கும் வேளையில், டிரம்ப் விதிக்கும் கட்டுப்பாடுகள் இந்தியர்கள் அமெரிக்கா பக்கமே போக முடியாத அளவு நிலைமை மாறிவருகிறது.
டிரம்ப் சமீபத்தில் மாணவர் விசாக்களை ரத்து செய்வது, அமெரிக்க கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கொடுப்படும் நெருக்கடி, இது மட்டும் அனைத்து விசா விண்ணப்பதாரர்களையும் கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் விசா வாங்கி அமெரிக்காவுக்கு போவதை விடவும் விண்வெளிக்கு செல்வது எளிதாகும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம், விசா நேர்காணல் முன்பதிவை விரைவுபடுத்துவதற்கு 1,000 டாலர் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை பரிசீலிக்கிறது என்று அமெரிக்க அதிகாரி ஒருவரும், வெளியுறவுத்துறை அதிகாரிகள் மத்தயில் பகிரப்பட்ட உள் மெமோவிலும் கூறப்பட்டு உள்ளது.
இந்த புதிய திட்டம், சில விசா விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக இண்டர்வியூவ் ஸ்லாட் கிடைக்க வாய்ப்பை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த 1000 டாலர் கட்டண சேவை யாருக்கெல்லாம் கிடைக்கும்.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, டிரம்ப் நிர்வாகம் சுற்றுலா மற்றும் பிற குறுகிய கால அமெரிக்க விசாக்களுக்கு மட்டும் வழங்க திட்டமிட்டு வருகிறது. இந்த விசாக்களுக்கு தற்போதைய பிராசசிங் கட்டணமாக 185 டாலர் தொகையை வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிதாக 1,000 டாலர் கட்டணம், பிரீமியம் சேவையாக செயல்படும். இது சுற்றுலா மற்றும் பிற குறுகிய கால விசா விண்ணப்பதாரர்களுக்கு வரிசைப்படி கிடைக்கும் இண்டர்வியூவ் வருவதை தவிர்த்து, விரைவாக இண்டர்வியூவ் பெற உதவும். இந்த புதிய 1000 டாலர் திட்டம், டிரம்ப்பின் "கோல்டு கார்டு" திட்டத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. கோல்டூ கார்டு திட்டத்தின் கீழ் 5 மில்லியன் டாலர் செலுத்துவோருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.
இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சுற்றுலா விசா பெர விண்ணப்பித்து பல வருடங்களாக காத்திருக்கும் வேளையில் டிரம்ப் அரசு மக்களின் காத்திருப்பை பணமாக்கும் முயற்சியில் இந்த 1000 டாலர் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. ஆனால் டிரம்ப்-ன் திட்டத்தை நிறுத்த ஒரு ஆபத்து உள்ளது என்பது தான் தற்போதைய பிரச்சனை.
ஆனா சட்ட சிக்கல்கள் இருக்கு: டிரம்ப்-ன் இந்த 1000 டாலர் திட்டத்தை அமெரிக்க வெளியுறவுத் துறையின் சட்டக் குழு "உயர் அபாயம்" கொண்டது என்று எச்சரித்துள்ளது. இந்த திட்டம் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் அலுவலகத்தால் நிராகரிக்கப்படலாம் அல்லது அமெரிக்க நீதிமன்றங்களில் தடுக்கப்படலாம் என்று தனது மெமோ-வில் குறிப்பிட்டு உள்ளது என ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஒரு சேவையின் செலவை விட அதிக கட்டணம் வசூலிப்பது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது 185 டாலர் சேவைக்கு 1000 டாலர் கட்டணம் என்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதை தான் அமெரிக்க வெளியுறவுத் துறையின் சட்டக் குழு இந்த மெமோ மூலம் விவரிக்கிறது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications