அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்கும் அறிவிப்பை ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இதற்கான நிர்வாக உத்தரவிலும் கையெழுத்திட்டு உள்ளார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதைக் கண்டிக்கும் வகையில், அபராத வரியாக இந்த கூடுதல் 25 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வர உள்ளது.

இந்த வரி விதிப்பு உத்தரவு 21 நாட்களுக்குப் பிறகு அமலுக்கு வருவதால், இந்தியா மற்றும் ரஷ்யா அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கால அவகாசம் உள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள், வரி விதிப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்கு அல்லது மாற்றுத் தீர்வுகளைக் காண்பதற்கு வழிவகுக்கலாம்.
இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனாலும் இரு நாடுகள் மத்தியிலான சாதகமான ஒப்பந்தம் எட்ட முடியவில்லை என்பதால் இறுதி தீர்வை எட்ட முடியாமல் உள்ளது. இப்படியிருக்கையில் அடுத்த சில மாதத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் டெல்லியில் சந்திக்க உள்ளனர்.
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட டொனால்டு டிரம்ப் அரசு இந்தியாவின் பால்வளத்துறை மற்றும் விவசாய துறையில் அமெரிக்க நிறுவனங்களையும், அமெரிக்க முதலீடுகளையும் அனுமதிக்கக் கட்டாயப்படுத்து வருகிறது. இது இந்தியாவுக்கு பெரும் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்தியாவின் பால் வள துறை (Dairy), நாட்டின் மொத்த மதிப்பு சேர்க்கை (GVA)யில் சுமார் 2.5-3% பங்கு வகிக்கிறது, இதன் மதிப்பு என்று பார்த்தால் சுமார் 7.5 - 9 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. இந்த துறையில் மட்டும் சுமார் 8 கோடி நபர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளைக் கொடுத்து, அவர்களுக்கு தினசரி வருமானத்தை அளிக்கிறது. குறிப்பாகப் பால்வளத்துறை கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது,
இதன் காரணமாகவே ஆகஸ்ட் 1ஆம் தேதி டெட்லைனில் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை, இதற்காக இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா விதித்தது. இதை தொடர்ந்து தற்போது ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை:
இந்த நிலையில் இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கலாம்..? பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு தனது வர்த்தக மற்றும் பாதுகாப்பு முடிவுகளை ஏன் முக்கியம், ஏன் அவசியம் என்பதைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம், இதன் வாயிலாக அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கலாம்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளின் வெற்றி, இரு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் முன்னுரிமைகளைப் பொறுத்து அமையும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவுடனான வர்த்தக உறவு முக்கியமானது என்பதால், இந்த பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படலாம்.
பதிலடி கொடுக்குமா இந்தியா?:
இந்தியா அரசு, டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் அமெரிக்காவுக்கு எதிர் வரி வாயிலாகப் பதிலடி கொடுத்தது போல், இந்த முறையிலும் அமெரிக்கப் பொருட்களுக்கும், சேவைகளுக்கும் இந்திய அரசு வரியை விதிக்கலாம். ஆனால் மோடி அரசின் நிலைப்பாடு என்ன என்பது தான் அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது.
இதேவேளையில் மோடி, இந்த மாத இறுதியில் சீனாவுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா இன்னும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத காரணத்தால் மோடியின் சீன சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications