அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ள திட்டமிட்டிருந்த முக்கிய வர்த்தக ஒப்பந்தம் தற்போது தாமதமாகக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், தனது வர்த்தக கூட்டாளி நாடுகளின் தொழில்துறை உற்பத்தி திறன் தொடர்பாக புதிய விசாரணைகளை தொடங்கியுள்ளதால் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதத்திலேயே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பிறகு முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு நாடுகளும் திட்டமிட்டிருந்தன.

பிப்ரவரி மாதத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்திருந்த உயர்ந்த இறக்குமதி வரிகளை குறைக்க ஒப்புக்கொண்ட பின்னரே வர்த்தக ஒப்பந்தம் செய்ய இரு நாடுகளும் முடிவு செய்தது.
அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் வாங்குவதை நிறுத்து ஒப்புக்கொண்டது, அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சில இறக்குமதி வரிகளை குறைப்பது மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களை சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்குவது போன்ற முக்கிய வாக்குறுதி இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா தரப்பில் கொடுத்திருந்தது.
இதேபோல் அமெரிக்கா தனது ரெசிப்ரோக்கல் வரியை குறைந்தது மூலம் இந்தியாவுக்கு பெரும் வர்த்தக வாய்ப்பு உருவானது. ஆனால் இந்த வரி விதிப்பும் அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் முழுமையாக நீக்கப்பட்டு புதிய விதியின் கீழ் டிரம்ப் அனைத்து நாடுகளுக்கு 10-15 சதவீத வரியை விதித்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தனது வர்த்தக கூட்டாளிகள் சில துறைகளில் அதிகமான தொழில்துறை உற்பத்தி திறனை பயன்படுத்தி உலக சந்தையில் போட்டியை பாதிக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும் புதிய விசாரணைகளை தொடங்கியுள்ளது.
அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், தங்களுடன் வர்த்தகம் செய்யும் சில நாடுகளில் அதிகமான தொழில்துறை உற்பத்தி திறன் (excess industrial capacity) இருக்கிறதா என்பதைப் பற்றி புதிய விசாரணைகளை தொடங்கியுள்ளது.
அதாவது, சில நாடுகள் தேவைக்குமேல் பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தையில் அதிகமாக விற்பனை செய்து அமெரிக்க தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை அமெரிக்க அரசு ஆய்வு செய்து வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நாடுகள் உடன் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.
இந்த விசாரணைகள் காரணமாக இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகளில் புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதன் விளைவாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் காலக்கெடு தற்போது சில பல மாதங்களுக்கு பின்னுக்கு தள்ளப்படலாம் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் வர்த்தக அமைச்சகமும் வெளிநாட்டு விவகார அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து வெளியான தகவலின்படி, இந்தியாவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா உலகின் முக்கிய பொருளாதார சக்திகளாக இருப்பதால், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் உலக வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
தற்போது உருவாகியுள்ள தாமதம் தற்காலிகமானதாக இருந்தாலும், இந்த பேச்சுவார்த்தைகளின் இறுதி முடிவு இரு நாடுகளின் வர்த்தக மற்றும் பொருளாதார உறவை தீர்மானிக்கும் முக்கியமான சக்தியாக இருக்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications