அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனவெல்லாம் வீணானது போல் இன்று வெளியான பெடரல் ரிசர்வ் நாணய கொள்கை முடிவில் வட்டி குறைக்கப்படாமல் பழைய வட்டி விகிதமே தொடரும் என ஜெரோம் பவல் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் மீண்டும் ரெசிஷன் அச்சம் அதிகரித்துள்ளது, இதற்கிடையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா - சீனா மத்தியிலான பேச்சுவார்த்தை தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145 சதவீத வரி இப்போதைக்கு தொடரும் என டிரம்ப் புதன்கிழமை ஒரு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசும் போது அறிவித்தார். இதனால் சந்தையில் பல கணிப்புகளும், ஊகங்களும் உருவாக துவங்கியுள்ளது.

இந்த வாரம் சுவிட்சர்லாந்தில் அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள வேளையில், இப்பேச்சுவார்த்தை துவங்கும் முன்பு டிரம்ப் 145 சதவீத வரி இப்போது நடைமுறையில் இருக்கும் என அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு இப்பேச்சுவார்த்தையில் விருப்பும் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் முக்கியமாகும்.
சீனாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக டேவிட் பெர்டியூவின் பதவியேற்பு விழாவில் பேசிய
டொனால்டு டிரம்ப், நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அமெரிக்க வர்த்தகத்தில் ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் டாலர் இழப்பை சந்தித்து. இப்போது நாம் எதையும் இழப்பதில்லை என்று கூறினார். சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கிய வேளையில் வரிகளைக் குறைக்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, டிரம்ப் "இல்லை" என்று திட்டவட்டமாக பதிலளித்தார்.
மேலும், சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ள இந்த வார பேச்சுவார்த்தையை அமெரிக்கா தொடங்கியதாக சீனா கூறுகிறது, இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். யார் முதலில் பேச்சுவார்த்தையை துவங்கினார்கள் என்பதை அவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்தால் தெரிந்துவிடும் என்றும் டிரம்ப் கூறினார். இதன் மூலம் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை மோசமாக தான் முடியும் என பலரும் இப்போதே கணிக்க துவங்கியுள்ளனர்.
டிரம்ப்-ன் இந்த பேச்சு அமெரிக்க பங்குச்சந்தையில் உடனடியாக எதிரொலித்தது. சீனா பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது, பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டியுள்ளது என்ற தகவல்கள் வாயிலாக வரி பிரச்சனை விரைவில் முடியும் என நம்பி பல தரப்பு அமெரிக்க சந்தையில் முதலீடு செய்ய துவங்கினர். ஆனால் இது நடக்காது என்பது டிரம்ப்-ன் பேச்சு மூலம் தெரிய வந்துள்ளது, இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் முக்கிய குறியீடுகள் நேற்று சில தடுமாற்றத்தை கண்டது.
மார்ச் மாதம் தொடங்கிய வரி யுத்தத்தால், உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பெருமளவில் தடைபட்டுள்ளது. இருப்பினும், இந்த வாரம் அமெரிக்க மற்றும் சீன வர்த்தக அதிகாரிகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என் கணிக்கப்பட்டது.
அமெரிக்க - சீனா மத்தியிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முடிவு, அமெரிக்காவில் பணவீக்கம், வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வோர் செலவு ஆகியவற்றை பாதிக்கலாம். மேலும், சீனாவுடனான வர்த்தக உறவுகள் மேம்படவில்லை என்றால், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
டிரம்ப்-ன் முதல் ஆட்சி காலத்தில் இருந்தே அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர், இரு நாடுகளுக்கும் இடையேயான இறக்குமதி-ஏற்றுமதி வரிகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை கட்டுப்படுத்துவது என பல முட்டுக்கட்டைகளை போட்டது.
சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள், அமெரிக்க-சீன வர்த்தக உறவில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், டிரம்பின் கடுமையான நிலைப்பாடு மற்றும் வரிகளை குறைக்க மறுப்பது, இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதை தான் காட்டுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications