அமெரிக்க கார்ப்ரேட் துறையிலும், ஏஐ துறையிலும் முக்கிய திருப்பமாக 2 திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த என்விடியா நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான ஜென்சன் ஹுவாக் அனைத்து நிர்வாக பதவியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார்.
இதோடு என்விடியா நிர்வாக குழுவும் புதிய சிஇஓ-வை தேடும் பணியில் இறங்கியிருக்கும் வேளையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் முக்கியமான பதிவைச் செய்துள்ளார்.

டிரம்ப் பரிந்துரை
என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதைத் தொடர்ந்து டிரம்ர் தனது பதிவில், மேலும் டிரம்ப் தனது பதிவில் என்விடியா-வின் சிஇஓ-வாக ஜென்சன் ஹுவாங் சிறப்பாகப் பணியாற்றிய நிலையில், தற்போது பதவி விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்க ஒரே ஒருவர் தான் இருக்கிறார். என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக தலைவராக இருந்த டிம் குக் தான் சரியான நபர் என பரிந்துரை செய்துள்ளார்.
எலான் மஸ்க் அழைப்பு
இதேபோல் என்விடியா நிறுவனத்தில் இருந்து ஜென்சன் ஹுவாங் வெளியேறினால் அவரை உங்கள் நிறுவனத்தில் பணியமர்த்துங்கள் என எலான் மஸ்க்-ஐ டேக் செய்து எக்ஸ் தளத்தில் நிதியியல் தளமான ZeroHedge வெளியிட்ட பதிவுக்கு எலான் மஸ்க் அதிரடியான பதிலை தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் - ஜென்சன் ஹுவாங் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அல்லாமல் அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும் ஆதரவாளர்கள். இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.
இந்த நிலையில் ZeroHedge பதிவுக்குப் பதில் அளிக்கையில், ஜென்சன் ஹுவாங் எங்களுடைய நிறுவனத்தில் சேர்ந்தால் அது எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால சிஇஓ
என்விடியா நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியும், நிர்வாக துணைத் தலைவருமான கோலெட் கிரெஸ் (Colette Kress) புதிய சிஇஓ நியமிக்கப்படும் வரையில் இடைக்கால சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால சிஇஓ-வாக இருந்தாலும் சிஎப்ஓ பொறுப்பையும் தொடர்ந்து கவனிப்பார் கோலெட் கிரெஸ்.
முதல் நிர்வாக குழு தலைவர்
என்விடியா நிர்வாகம் ஹார்வி சி.ஜோன்ஸ் என்பவரை என்விடியாவின் முதல் நிர்வாக குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. 73 வயதான இவர் சினாப்சிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஆவார், மேலும் இவர் என்விடியா நிர்வாக குழுவில் நீண்ட காலமாக இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications

