அமெரிக்க வேலை, அமெரிக்கா வாழ்க்கை என்று பெரும் கனவுடன் முட்டி மோதி அமெரிக்காகவுக்கு செய்யும் பல லட்சம் மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் டிரம்ப் தலைமையிலான அரசு புதிய கட்டணத்தை மாணவர்களுக்கு விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசா மீது டிரம்ப் விதிக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடும் பெரும் தோல்வியை சந்திக்கும் வேளையிலும், மீண்டும் ஒரு முயற்சியை டிரம்ப் எடுத்துள்ளது இந்திய மாணவர்கள் மத்தியில் அச்சம் உருவாகியுள்ளது.

முன்பு டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா பெறுவதற்காக 1 லட்சம் டாலர் கட்டணத்தி விதிக்க உள்ளதாக அறிவித்தார், இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் இந்த கட்டணத்தை ரத்து செய்து தடை விதித்தது.
இதைபோல் அமெரிக்காவில் வெளிநாட்டினரின் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை அளிக்க கூடாது என டிரம்ப் கொண்டு வந்த சட்டமும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
இத்தகைய தோல்விகளுக்கு பின்பும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம், வெளிநாட்டில் இருந்து அந்நாட்டிற்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு அமெரிக்காவில் தங்கவும், படிப்பை முடித்து அந்நாட்டில் தங்கி பணியாற்றவும் கட்டணமாக 1,00,000 டாலரை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஸ்டுடென்ட் விசா வைத்துள்ளவர்கள் மீது பல்வேறு இமிக்ரேஷன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் வேளையில், இப்புதிய கட்டணம் அமெரிக்க கனவுடன் இருக்கும் மாணவர்களுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும்.
இதுக்குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில், ஸ்டுடென்ட் விசா வைத்துள்ளவர்கள் மீது 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது உடனடியாக கொள்கையாக கொண்டுவரப்பட வாய்ப்பில்லை, ஆனால் இதற்கான ஆலோசனைகள் நடக்கவில்லை என்பதையும் மறுக்கவில்லை.
டிரம்ப் நிர்வாகம் எப்படி ரெசிப்ரோக்கல் வரியை பல்வேறு வகைகளில் திரும்ப உலக நாடுகள் மீது விதிக்க தயாராகி வருகிறதோ, இதேபோல் விசா கட்டுப்பாடுகளையும் மாற்று வழியில் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
இந்த 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது ஸ்டுடென்ட் விசாவில் அமெரிக்கா வந்து படிப்படை முடித்து அந்நாட்டில் வேலை செய்ய திட்டமிட்டுவோருக்கு மட்டுமே விதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவில் ஸ்டுடென்ட் விசாவின் சிறப்பு அம்சமே இந்த OPT தான், ஒவ்வொரு ஆண்டும் 2-3 லட்சம் மாணவர்கள் ஸ்டுடென்ட் விசாவில் வந்து படித்து வேலைவாய்ப்பு சந்தைக்கு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

