அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நேச்சுரலைஸ்டு அமெரிக்க குடிமக்களின் குடியுரிமையை ரத்து செய்யும் முயற்சிகளை எப்போதும் இல்லாமல் அதிகரிக்க உத்தரவிட்டு உள்ளது. இதுநாள் வரையில் புதிதாக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களை மட்டுமே டிரம்ப் நிர்வாகம் குறிவைத்த நிலையில், தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினரையும் குறிவைக்க துவங்கியுள்ளதால் அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்கள் மத்தியில் பீதி அதிகரித்துள்ளது.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் USCIS அமைப்பின் பீல்டு ஆபீசர்களுக்கு கொடுத்துள்ள வழிகாட்டுதலின்படி, 2026 நிதியாண்டில் மாதம் 100 முதல் 200 denaturalization வழக்குகளை நீதித்துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் கடுமையான மாற்றத்தை காட்டுகிறது.

2017 முதல் இதுவரை வெறும் 120 denaturalization வழக்குகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளையில் மாதம் 100 முதல் 200 வழக்குகளை பெற டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. Denaturalization வழக்கு என்பது குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யும் வழக்கு.
நேச்சுரலைஸ்டு அமெரிக்க குடிமக்கள் என்றால் யார்..? இவர்களின் குடியுரிமை அதாவது சிட்டிசன்ஷிப் ரத்து செய்வது மூலம் இந்தியர்களுக்கு பாதிப்பா..? முழுவிபரத்தையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
நேச்சுரலைஸ்டு அமெரிக்கர்கள் என்றால் யார்?
நேச்சுரலைஸ்டு அமெரிக்கர்கள் (Naturalized Americans) என்பவர்கள் அமெரிக்காவில் பிறக்காதவர்கள். வெளிநாடுகளில் பிறந்து, சட்டப்படி அமெரிக்காவில் தங்கி குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் விசா மூலம் அமெரிக்கா வந்து, பல ஆண்டுகள் வாழ்ந்து, பல்வேறு கட்ட விண்ணப்பம், சோதனைகள், இண்டர்வியூவ் செய்யப்பட்டு குடியுரிமை பெறுகின்றனர்.
இந்தியர்கள் உள்ளிட்ட உலக நாடுகளை சேர்ந்த பல லட்சம் பேர் இந்த வகையில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் வேலை, வியாபாரம், கல்வி போன்றவற்றுக்காக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குடியுரிமை பெற்றவர்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமை, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைக்கும்.
குடியுரிமை ரத்து எப்போது நடக்கும்?
அமெரிக்க சட்டப்படி, குடியுரிமை பெறுவதில் மோசடி அல்லது பொய் தகவல் கொடுத்து குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும். ஆனால் தற்போது டிரம்ப் நிர்வாகம் கொடுத்த உத்தரவுகளை பார்க்கும் போது அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு மக்களின் குடியுரிமையை USCIS அமைப்பு இது சிறிய தவறுகள் அல்லது தெரியாமல் செய்த பிழைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று அச்சம் தெரிவிக்கின்றன.
இது நேச்சுரலைஸ்டு குடிமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும். டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே குடியேற்ற விதிகளை கடுமையாக்கி, அகதிகளை ஏற்றுக்கொள்வதை குறைத்து, சில ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளது. இதை தாண்டி தற்போது குடியுரிமை பெற்றவர்களையும் டிரம்ப் அரசு டார்கெட் செய்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா?
இந்தியர்கள் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நேச்சுரலைஸ்டு குடிமக்களாக உள்ளனர். குறிப்பாக டெக் ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் என சமுகத்தில் முக்கிய பதவிகளிலும், பொறுப்புகளிலும் உள்ளனர். இந்த புதிய முடிவு இந்தியர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது. மோசடி வழக்குகள் அதிகரித்தால் பலர் குடியுரிமை இழப்பு அச்சத்தில் வாழ நேரிடும். இது இந்திய-அமெரிக்க உறவுகளையும் பாதிக்கலாம். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்த மாற்றத்தை கவனமாக கவனிக்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications