அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் உடனடியாக தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி விட்டார். ஏற்கனவே அறிவித்தப்படி மெக்சிகோ மற்றும் கனடா நாட்டு பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து இதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவிற்கும், கனடா மற்றும் மெக்சிகோவுக்கும் இடையே மிகப்பெரிய வர்த்தக போர் உருவாகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் அதிபாரன உடன் சீனா-வை தான் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த வேளையில் தற்போது இவ்விரு நாடுகளை அடித்துள்ளார்.

அதிபராக பதவி ஏற்ற பிறகு பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்ட அவர் கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.
ஏனெனில் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் முறைகேடாக அமெரிக்காவினுள் நுழைவதற்கு அனுமதி தருகின்றன என்றும் பென்டனைல் எனப்படும் போதை மருந்து அமெரிக்காவிற்கு கடத்தி வருவதற்கு இந்த இரு நாடுகளும் பெரிய அளவில் அனுமதி தருவதாகவும் குற்றம்சாட்டினார். குறிப்பாக கனடா முறைகேடாக பலர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு உதவியாக இருக்கிறது என சாடினார்.
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய அண்டை நாடுகள் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கனடா மற்றும் மெக்சிகோ பொருட்கள் மீது இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்ற டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து மெக்சிகோ நாட்டின் நாணயமான பெசோவும் கனடா நாட்டின் டாலரின் மதிப்பும் சரிவடைந்தன. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வடைந்தது.
அதே போல சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் சூசகமாக டிரம்ப் குறிப்பிட்டார். சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது ஆனால் அதைவிட மிகக் குறைவான அளவிலேயே நாங்கள் சீன பொருட்களுக்கு வரி விதிக்கிறோம். இது முறையற்ற வர்த்தகத்திற்கு வித்திடுகிறது, இது குறித்து சீன அதிபரோடு விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் டிக் டாக் செயலியை செயலியில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்திற்கு 50 சதவீத பங்கினை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திற்கு சீனா இணங்கவில்லை என்றால் சீன பொருட்கள் மீதான வரியை அதிகரிப்போம் என்ற மிரட்டலையும் அவர் முன்வைத்தார். நம் நாட்டு குடிமக்களுக்கு வரி விதித்து மற்ற நாடுகளை வளப்படுத்துவதை விட மற்ற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்து நம் நாட்டு குடிமக்களை வளப்படுத்த வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என கூறியுள்ளார்.
மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டமைப்பில் இந்தியாவும் இருக்கிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் கொள்கைகள் சீனாவுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது என நீண்ட காலமாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications