ரியல் எஸ்டேட் துறையில் குண்டை போட்ட டிரம்ப்.. NRI மக்களே உஷார்..!!

அமெரிக்காவில் மிட்டர்ம் தேர்தல் வரும் காரணத்தால் அடித்தடுத்து அதிரடி அறிவிப்புகளையும், முடிவுகளையும் டிரம்ப் எடுத்து வருகிறார். இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பது டிரம்ப்-ன் கனவு. இதற்காக ஒருப்பக்கம் உலகளாவிய பிரச்சனைகளை வலது கையில் சமாளித்து வரும் வேளையில், இடது கையில் அமெரிக்கா மக்களின் நலனை காக்கும் வகையில் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் சமூக வலைதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பால் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை அதிர்ச்சியில் உள்ளது மட்டும் அல்லாமல் பல்வேறு முக்கிய பகுதியில் வீட்டின் விலை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை புதிதாக வீடு வாங்க திட்டமிடுவோரும், அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐ-களும் பயன்படுத்தலாம். அப்படி என்ன அறிவிப்பு என்று தானே கேட்டுகுறீங்க.

ரியல் எஸ்டேட் துறையில் குண்டை போட்ட டிரம்ப்.. NRI மக்களே உஷார்..!!

டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் இருக்கும் பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் தனி குடும்ப வீடுகள் அதாவது ஒரு குடும்பம் மட்டுமே வாழக்கூடிய single-family homes வாங்குவதை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். "வீடுகளில் மக்கள் வசிக்க வேண்டும், நிறுவனங்கள் அல்ல" என்று டிரம்ப் தனது பதிவில் ஆணித்தனமாக வலியுறுத்தினார்.

இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் சந்தையில் கூடுதல் சப்ளை உருவாகி டிமாண்ட் மூலம் செயற்கையாக விலை உயர்வது கட்டுக்குள் கொண்டுவரப்படும். இதன் மூலம் வீட்டு விலை குறைந்து, சாமானிய மக்கள் வீடு வாங்குவதை எளிதாக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது. ஆனால், இதன் விவரங்கள் மற்றும் அமலாக்க முறை இன்னும் தெளிவாகத் டிரம்ப் அரசு தெரிவிக்கவில்லை. இதனால் அடுத்த வாரம் முழுக்க அமெரிக்க அரசியல் மற்றும் முதலீட்டு களம் பரபரவென இருக்க போகிறது.

நிறுவன முதலீட்டாளர்கள் டார்கெட்
டிரம்ப் அரசு ஆரம்பம் முதல் அமெரிக்க மக்களின் நலனை காப்பதில் பெருமளவில் கவனம் செலுத்தி வரும் வேளையில், இந்தத் தடை மூலம் அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் பெரிய நிறுவன முதலீட்டாளர்களை டார்கெட் செய்யப்பட்டு எடுக்கப்பட்டு உள்ளது.

பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் போன்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான single-family homes-ஐ வாங்கி வாடகைக்கு விடுகின்றன. இவை பெரும்பாலும் நகரங்களைச் சுற்றிய சுற்றுப்புற பகுதிகளில் இருப்பதாக உள்ளது. இதன் வாயிலாக அருகில் இருக்கும் பகுதியிலும் விலை உயர்வு நடக்கிறது என்பது டிரம்ப்-ன் குற்றச்சாட்டு.

ஜான் பர்ன்ஸ் ரிசர்ச் அண்ட் கன்சல்டிங் நிறுவனத்தின் ஆய்வின்படி, அமெரிக்காவின் தனி குடும்ப வீட்டு சந்தையில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை வெறும் 2 சதவீதம் மட்டுமே என தெரிவித்துள்ளது. இதனால் இந்த தடை உத்தரவு அமெரிக்க ரியல் எஸ்டேட் சந்தையில் உண்மையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சாமானிய மக்களுக்கு நன்மை
இந்தத் திட்டம் அமலானால், சாமானிய குடும்பங்கள் வீடு வாங்குவதில் போட்டி குறையும். நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வீடுகளை வாங்குவதால் ஏற்படும் விலை உயர்வு தடுக்கப்படும். குறிப்பாக, வளர்ச்சியடைந்து வரும் சந்தைகளில் குடும்பங்கள் நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அவசியம் குறையும். இது நடுத்தர மற்றும் குறைந்த வருமான குடும்பங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

என்ஆர்ஐ-களுக்கு நன்மை
அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான இந்தியர்கள் சிறிய பட்ஜெட்டில், பெரு நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தான் வீடு வாங்குவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில், இந்த அறிவிப்பால் வீடு விலை குறைந்தால் NRI-களுக்கு இது ஜாக்பாட் ஆக அமையும்.

டிரம்ப் செய்வது சரியா..?
அமெரிக்க ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு கொனாரோ தொற்று காலத்தில் சந்தையில் 3 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைந்துள்ளது. பென்ச்மார்க் வட்டி விகித உயர்வு காரணமாக அவர்களின் செயல்பாடு குறைந்துள்ளது. எனவே, இந்தத் தடை எந்த அளவுக்கு வீட்டு விலையை குறைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது அமெரிக்க சந்தையில் வீடுகளின் தட்டுப்பாடே விலை உயர்வுக்கு முதல் காரணம் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர். நிறுவனங்களின் பங்கு அதிகம் இல்லாத நிலையில், இந்தத் திட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+