அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தின் முக்கிய பொருளாதார திட்டமான One Big Beautiful Bill Act என்ற மசோதா அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 1,116 பக்கங்கள் கொண்ட இந்த மசோதா, வரி மற்றும் செலவு தொடர்பான பல மாற்றங்களை உள்ளடக்கியது. சரி இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம், ஆனா பெரிய தொடர்பு இருக்கு.
இந்த மசோதா ட்ரம்பின் பொருளாதார பார்வையை அப்படியே பிரதிபலிக்கிறது, அதேபோல் அமெரிக்க பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா இப்போது செனட் சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, அங்கு பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில் இந்த மசோதாவில் கொண்டுவரப்பட்ட முக்கியமான ஒரு விஷயம் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் தொகை மீதான வரி.

டிரம்ப் கடந்த வாரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படும் என கூறிய போது ஒட்டுமொத்த என்ஆர்ஐ மக்களும், இந்தியாவில் இருக்கும் அவர்களின் குடும்பமும் அதிர்ச்சி அடைந்தது. இது வழக்கம் போல் வழக்கு தொடுக்கப்பட்டும், நாளுடாளுமன்றத்தில் நீக்கப்படும் என நினைத்த போது டிரம்ப் திடிரென வரியை மசோதாவில் கொண்டு வந்துள்ளார்.
டிரம்ப் முதலில் 5 சதவீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்த அவர், இதை 5%லிருந்து 3.5% ஆக குறைத்து இந்த மசோதாவில் அறிவித்துள்ளார். இதை "எக்சைஸ் வரி" என்ற பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றால் அமெரிக்காவில் இருக்கும் என்ஆர்ஐ-கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்திற்கு 3.5 சதவீத வரி விதிப்பு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
இந்த மாற்றம், அமெரிக்காவில் வசிக்கும் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ளது. இந்த வரி, அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதாவது அந்நாட்டின் குடியுரிமை கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. எனவே கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விசாவில் உள்ளவர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணத்திலும் இந்த வரி பாதிப்பு இருக்கும்.
2023 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் 29 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர், மெக்சிகோவுக்கு அடுத்து அமெரிக்காவில் வசிக்கும் அதிக வெளிநாட்டினர் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 47.8 மில்லியன் புலம்பெயர்ந்தோரில் இந்தியர்கள் 6% ஆக உள்ளனர்.
இந்தியர்கள், தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பும் பணத்திற்கு 5 சதவீதம் வரி விதிப்பதாக முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 3.5 சதவீதம் வரி விதிக்கப்படுவது நிதி சுமையை சிறிய அளவில் குறைக்கும். ஆனால் இதை மொத்தமாக நீக்கப்பட வேண்டும் என்பது தான் NRI-களின் முக்கிய குறிக்கோள் ஆக உள்ளது.
One Big Beautiful Bill Act என்று டிரம்ப் அழைக்கும் இந்த மசோதா தற்போது செனட் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது, அங்கு இந்த மசோதா கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மசோதாவில் மாற்றங்கள் செய்யப்படலாம். செனட்டில் ஒப்புதல் பெறும் போதும் மசோதாவில் என்ன இருக்கிறதோ அதுதான் நடைமுறைக்கு வரும்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications