அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த உலக நாடுகள் மீது விதித்த இறக்குமதி வரிகள், சட்டரீதியாக சவாலுக்கு உள்ளான நிலையில், வாஷிங்டனில் உள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வரிகளை மீண்டும் நடைமுறைப்படுத்த அனுமதி அளித்துள்ளது.
டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் தலைவலியாக இருந்த நிலையில், அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியா உட்பட பல நாடுகளுக்கு நம்மதியை அளித்தது. ஆனால் இந்த நிம்மதி 24 மணிநேரம் கூட நீடிக்கவில்லை என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், டிரம்ப் தனது அவசரகால அதிகாரங்களை மீறி இந்த வரிகளை விதித்ததாக முடிவு செய்து வரி விதிப்பை ரத்து செய்ய தீர்ப்பு அளித்தது. ஆனால் அடுத்த ஒரு நாளில் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் (federal appeals court) இந்த தீர்ப்புக்கு தற்காலிக இடைநிறுத்த உத்தரவை வெளியிட்டு உள்ளது.
இதனால், ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் "விடுதலை நாள்" என்ற பெயரில் அறிவித்த அனைத்து வரிகளும், அரசு மேல்முறையீடு செய்யும் வரை நடைமுறையில் இருக்கும். 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை (IEEPA) அதிபர் டிரம்ப்-ம் டிரம்ப் நிர்வாகமும் தவறாகப் பயன்படுத்தியதாக வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
டொனால்ட் டிரம்ப் IEEPA சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, தேசிய அவசரநிலையை அறிவித்து, கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதித்ததை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தச் சட்டம் அவசர தேசிய அச்சுறுத்தல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, நீண்டகால வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய வரிகளை விதிக்க அனுமதிக்காது என்று தெளிவுப்படுத்தியது.
இந்தத் தீர்ப்பு, டிரம்பின் இறக்குமதி வரிகளை சட்டவிரோதமாகவும், சட்டத்திற்கு எதிராகவும் கொண்டு வரப்பட்டு உள்ளது என திட்டவட்டமாக அறிவித்தது. இந்த உத்தரவுக்கு தான் தற்போது வாஷிங்டனில் உள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் (US Court of Appeals for the Federal Circuit) தற்காலிக தடை உத்தரவை வழங்கியது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications