அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாம் பதவிக்காலத்தில் (2025 முதல்) அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளை மாற்றியமைக்கும் வகையில் பல மாற்றங்களை செய்தார், இதிஸ் முக்கியமாக பரஸ்பர வரி எனப்படும் ரெசிப்ரோக்கல் வரிகளை அறிமுகப்படுத்தினார்.
இந்த வரிகள், அமெரிக்காவுக்கும் - பிற நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை, புலம்பெயர்ந்தோர் பிரச்சினைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விதிக்கப்பட்டன. 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை (IEEPA) பயன்படுத்தி, டிரம்ப் இந்த வரிகளை அறிவித்தார், ஆனால் இவை சட்டரீதியாக சவாலுக்கு உள்ளாகி வருகிறது.

டிரம்பின் இரண்டாம் பதவிக்காலத்தில் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு தொடர்பான டைம்லைன்-ஐ இப்போது பார்ப்போம்.
ஜனவரி 20, 2025: டொனால்டு டிரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபராக பதிவியேற்றார். முதல் நாளிலேயே பல முக்கியமான அறிவிப்புகளில் கையெழுத்திட்டார்.
இதே நாளில் கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இந்த வரிகள், பென்டானில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை கட்டுப்படுத்த இந்த நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி 25 சதவீத வரியை பிப்ரவரி 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என டிரம்ப் அரிவித்தார். இதுதான் முதல் முதலில் வரி விதிப்பு குறித்து டிரம்ப் பேசியது.
பிப்ரவரி 1, 2025: டிரம்ப், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியும் விதிப்பதாக அறிவித்தார். ஜனவரி 20ஆம் தேதி அறிவிப்பில் சீனா இல்லை, ஆனால் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிப்பில் சீனாவை டிரம்ப் சேர்த்துக்கொண்டார். இந்த வரிகள் தேசிய அவசரநிலையை காரணம் காட்டி IEEPA சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டன.
பிப்ரவரி 4, 2025: கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகள் நடைமுறைக்கு வந்தன. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் எனர்ஜி-க்கு 10% என்ற குறைந்த வரி விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள், USMCA ஒப்பந்தத்தை மீறுவதாக விமர்சிக்கப்பட்டன.
பிப்ரவரி 7, 2025: டிரம்ப்-ன் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU), அமெரிக்காவின் 2.5% வரியுடன் ஒப்பிடும்போது, தனது கார் இறக்குமதி வரியை 10% இலிருந்து குறைக்க முன்மொழிந்தது, மேலும் அமெரிக்க திரவ இயற்கை எரிவாயு மற்றும் இராணுவ உபகரணங்களை வாங்குவதை அதிகரிக்க ஒப்புக்கொண்டது.
பிப்ரவரி 13, 2025: டிரம்ப், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு எதிரான வெளிநாட்டு வர்த்தக தடைகளை ஆய்வு செய்யவும், பரஸ்பர வரிகளை உருவாக்கவும் தனது நிர்வாக குழுவிற்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், ஏற்றுமதி வரிகள், மாற்று விகிதங்கள் மற்றும் வர்த்தக இருப்பு ஆகியவை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்தத் திட்டத்தை ஏப்ரல் 1, 2025க்குள் தயார் செய்ய உத்தரவிடப்பட்டது.
பிப்ரவரி 25, 2025: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்பு டிரம்ப்-ன் கவனம் சீனா மீது திரும்பியது.
மார்ச் 3, 2025: எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட வரிகள், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகள் ஆகியவற்றை அமல்படுத்தும் அறிவிப்புகள் பொது ஆய்வுக்கு வெளியிடப்பட்டன.
மார்ச் 12, 2025: டிரம்ப், அயர்லாந்து அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், அயர்லாந்து அமெரிக்காவுடன் "பெரும்" வர்த்தக உபரியைக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இதேபோல் இந்தியாவையும் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்தார். அதே நாளில், எஃகு மற்றும் அலுமினியம் வரிகள் நடைமுறைக்கு வந்தன, இதற்கு பதிலடியாக EU, ஏப்ரல் 1 முதல் 26 பில்லியன் யூரோ மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இரண்டு-கட்டமாக புதிய வரி விதிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
மார்ச் 24, 2025: டிரம்ப், வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார், இது ஏப்ரல் 2 முதல் நடைமுறைக்கு வந்தது.
ஏப்ரல் 2, 2025: டிரம்ப் "விடுதலை நாள்" வரிகளை அறிவித்தார், இதில் அனைத்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து இறக்குமதிகளுக்கு 10% அடிப்படை வரி மற்றும் 57 நாடுகளுக்கு 20% முதல் 50% வரை வரிகள் விதிக்கப்பட்டது. உதாரணமாக சீனா 34%, தாய்லாந்து 36%, கம்போடியா 49%, இந்தியா 26% வரி விதிக்கப்பட்டது. இந்த வரிகள் IEEPA சட்டத்தின் கீழ் தேசிய அவசரநிலையை காரணம் காட்டி விதிக்கப்பட்டன. எல் சால்வடாருக்கு 10% பரஸ்பர வரி விதிக்கப்பட்டது, இதை எல் சால்வடார் அதிபர் நயிப் புகேலே "நீண்டகால சிந்தனை" என்று வரவேற்றார்.
ஏப்ரல் 4, 2025: சீனா, அமெரிக்க பொருட்களுக்கு 34% வரியை அறிவித்து, இது ஏற்கனவே விதிக்கப்பட்ட 20 சதவீத வரி தனி. இதற்கு சீனா பதிலடி கொடுத்தது, ஆனால் 90 நாட்களுக்கு இடைநிறுத்தியது, 10% வரியை தக்கவைத்தது.
ஏப்ரல் 5, 2025: 10% அடிப்படை வரி அனைத்து இறக்குமதிகளுக்கும் நடைமுறைக்கு வந்தது.
ஏப்ரல் 8, 2025: சீன இறக்குமதிகளுக்கு 125 சதவீதம் வரையில் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டன, ஆனால் பல்வேறு கட்ட பேச்சுவாத்தைக்கு பின்பு இவை மே 12 அன்று நீக்கப்பட்டன.
ஏப்ரல் 9, 2025: 57 நாடுகளுக்கு உயர் பரஸ்பர வரிகள் (20% முதல் 50% வரை) நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வரிகள் 90 நாட்களுக்கு (ஜூலை 9, 2025 வரை) இடைநிறுத்தப்பட்டன, ஆனால் 10% அடிப்படை வரி நீடித்தது.
மே 13, 2025: டிரம்ப்-ன் ரெசிப்ரோக்கல் வரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கு, IEEPA சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை தவறு என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
மே 28, 2025: அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், டிரம்பின் பரஸ்பர வரிகள் மற்றும் பென்டானில் தொடர்பான வரிகளை (கனடா, மெக்ஸிகோ, சீனா) சட்டவிரோதமாக அறிவித்து, அவற்றை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. IEEPA சட்டம் வரிகளை விதிக்க டிரம்ப் அரசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மே 29, 2025: வாஷிங்டனில் உள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம், வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி, அரசு மேல்முறையீடு செய்யும் வரை வரிகளை நடைமுறையில் வைத்திருக்க அனுமதித்தது.
இந்த ரெசிப்ரோக்கல் வரிகள், 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை (IEEPA) பயன்படுத்தி அறிவிக்கப்பட்டன. இருப்பினும், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் இந்த வரிகளை சட்டவிரோதமாக அறிவித்தது.
ஆனால், மறுநாளே வாஷிங்டனில் உள்ள மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக இடைநிறுத்த உத்தரவை வழங்கி, அரசு மேல்முறையீடு செய்யும் வரை வரிகளை நடைமுறையில் வைத்திருக்க அனுமதித்தது. இந்தக் காலவரிசையும் சட்ட முரண்பாடுகளும் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
டிரம்பின் பரஸ்பர வரிகள், உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த வரிகள், அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காகவும், பென்டானில் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தவும் விதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
இருப்பினும், இந்த வரிகள் அமெரிக்க நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு செலவு அதிகரிப்பு, விலைவாசி உயர்வு மற்றும் பதிலடி வரிகள் மூலம் கூடுதல் பாதிப்பு ஏற்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டன. 12 மாநிலங்கள் மற்றும் ஐந்து சிறு வணிகங்கள் இந்த வரிகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications