ஈரான் போர் அப்டேட்: ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி டிரம்ப் அலப்பறை..!!

கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக நிலவி வரும் ஈரான் போர் உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடங்கிய போர் உலகெங்கிலும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் போர் தொடங்கிய உடனே ஈரான் அரசு முக்கிய சரக்கு வழி போக்குவரத்து தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் சப்ளை குறைந்து போனது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஈரான் போர் தொடங்கிய இரண்டு மாத காலத்தில் மக்கள் அதிகமாக உச்சரித்த ஒரு பெயராக ஹார்முஸ் ஜலசந்தி தான் திகழ்கிறது. தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இரு தரப்பு போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது.

ஈரான் போர் அப்டேட்: ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி டிரம்ப் அலப்பறை..!!

ஆனால் அமைதி பேச்சு வார்த்தை நடந்து இதுவரை எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை, ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பது தான் இந்த போரின் முடிவையே தீர்மானிக்கும் காரணியாக இருக்க போகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். திடீர் திடீரென வித்தியாசமாக எதையாவது செய்து செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார் டிரம்ப்.

அந்த வகையில் தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கும் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை டிரம்ப் ஜலசந்தி என குறிப்பிடும் படத்தை பகிர்ந்துள்ளார். இதில் ஹார்முஸ் ஜலசந்தியின் வரைபடம் இடம் பெற்றிருக்கிறது. இதில் strait of hormuzக்கு பதிலாக starit of Trump அதாவது டிரம்ப் ஜலசந்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பேச்சுவார்த்தை நடக்காமல் போர் முடியுமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி புதிதாக டிரம்ப் ஈரானை வம்பிழுக்க தொடங்கியுள்ளார்.

Also Read

வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், கேஸ், உரம் ஆகியவை ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து தான் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 2 மாதமாக இந்த வழியாக எந்த ஒரு கப்பல்களும் தங்கள் அனுமதி இன்றி செல்லக்கூடாது அவ்வாறு சென்றால் அந்த கப்பல்களை வீழ்த்துவோம் என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது. தற்போது இந்த ஜலசந்தி கட்டுப்பாடு யார் கையில் இருக்கிறது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

Recommended For You

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக கூறுகிறது. அதேவேளையில் அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம் என தெரிவிக்கிறது. இரண்டு நாடுகளுமே இந்த பிரச்சினைக்கு முடிவு க்ட்டுவதாக இல்லை.ஆனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தால் மட்டுமே போரும் முடிவுக்கு வரும் உலக கச்சா எண்ணெய் பிரச்சினையும் தீரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+