ஈரானில் ஒரு மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் குண்டு சத்தங்களுக்கு மத்தியில் வசிக்க வேண்டிய சூழல் உண்டாகி இருக்கிறது.
பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு லாக்டவுன் சூழல் வந்துவிட்டது. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் எனக்கு விலை மதிப்புமிக்க ரகசியமான பரிசை வழங்கி இருக்கிறது என நேற்று கூறியிருந்தார். ஈரான் அப்படி என்ன ரகசிய பரிசினை டிம்பிற்கு தந்தது என உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஈரான் எனக்கு ஒரு மதிப்புமிக்க பரிசு கொடுத்திருக்கிறது, அது ஒரு ரகசியமான பரிசு அது ஹார்முஸ் ஜலசந்தி சம்பந்தப்பட்டது என சூசகமாக தெரிவித்திருந்தார். ஈரான் தீவிரமடைந்து வரக்கூடிய சூழலில் ஈரானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என டிரம்ப் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். ஆனால் ஈரான் தரப்பில் அப்படி எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை என தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் ஈரான் அப்படி தனக்கு தந்த ரகசிய பரிசு என்ன என்பதை விவரித்து இருக்கிறார் டிரம்ப். ஃ பாக்ஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள டிரம்ப் முதலில் ஈரான் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறோம் என்று கூறினேன் அதனை தற்போது 10 நாட்களாக நீட்டித்திருக்கிறேன் என்றார். அதாவது ஏப்ரல் ஆறாம் தேதி வரை ஈரானின் எரிசக்தி , மின்சக்தி கட்டமைப்புகள் மீது எந்த ஒரு தாக்குதலும் நடத்த மாட்டோம் என அறிவித்திருக்கிறேன் ஈரான் தந்த பரிசுக்கு பதிலடியாக தான் இப்படி ஒரு சலுகையை தந்திருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இதன் ஒரு பகுதியாக ஈரான் 8 எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்து இருக்கிறத. அதுவே ஈரான் எனக்கு தந்த பரிசு என கூறி இருக்கிறார். ஈரானின் இந்த செயல் தற்போது நடைபெற்று வரக்கூடிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான அமைதி பேச்சு வார்த்தையில் ஒரு பாசிட்டிவான முன்னேற்றத்தை காட்டுகிறது என டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஈரான் தரப்பில் எங்களுக்கு இன்னும் சில நாட்கள் தேவை என கேட்டுக்கொண்டனர் அதனால்தான் தாக்குதலை பத்து நாட்களுக்கு தள்ளி வைப்பதாக நான் கூறினேன் என தெரிவித்திருக்கிறார். முதலில் அவர்கள் ஏழு நாட்கள் தாக்குதல் நிறுத்தம் வேண்டும் என கேட்டார்கள் நான் அவர்களுக்கு 10 நாட்களாக கொடுத்து விட்டேன் என கூறியிருக்கிறார்.
ஈரான் தரப்பில் நம்பகத்தன்மையான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் வெளிப்படையாக தெரிவித்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் அவர்கள் பேச்சுவார்த்தை நடப்பதாக அறிவிக்காமல் உள்ளனர் என கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!



Click it and Unblock the Notifications