அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்த பிறகு நடத்திய வரலாற்று முக்கியமான செய்தியாளர் சந்திப்பில் இந்த தாக்குதல் எப்படி நடந்தது..? வெனிசுலாவை அமெரிக்க அரசு எப்படி கையாளப்போகிறது..? வெனிசுலா கச்சா எண்ணெய் நிலை என்ன..? என்பது குறித்து பேசிய அவர அடுத்தாக இதேபோன்ற தாக்குதலை கியூபா-வில் நடக்கலாம் என மறைமுக குறிப்பு விடுத்துள்ளார்.
லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையின் ஒரு பகுதியாக கியூபா முக்கிய விவாதமாக வரலாம் என்று டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வெனிசுலா மற்றும் கியூபாவின் நிலைமை ஓரே மாதிரியாக உள்ளது என்று கூறிய டிரம்ப், விரைவில் கியூபாவில் நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் கியூபாவிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கியூபா அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் Western Hemisphere-ல் அமெரிக்க ஆதிக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கியூபா அடுத்த இலக்காக இருக்கலாம் என்று ரூபியோவின் கருத்து காட்டுகிறது. இது உலக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா நடவடிக்கைக்குப் பிறகு, ஹவானாவில் அரசில் தான் பணியாற்றி இருந்தால் குறைந்தபட்சம் சற்று கவலைப்படுவேன் என்று மார்கோ ரூபியோ கூறினார். வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளிலும் நீண்ட காலம் விமர்சனம் செய்து வந்த மார்கோ ரூபியோ, இந்த கருத்தை செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.
கியூபா அதிபர் Miguel Diaz-Canel, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹவானாவில் நடந்த பேரணியில் வெனிசுலா கொடியை ஏந்திய டியாஸ்-கேனல், மதுரோவின் கைது சம்பவத்தை கண்டித்தார்.
இது வெனிசுலா - கியூமா நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான உறவை மீண்டும் காட்டியுள்ளது. கியூபா வெனிசுலாவின் மிக முக்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது, அரசியல், பொருளாதாரம், சித்தாந்த ரீதியாக இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்துள்ளன.
மேலும் டியாஸ்-கேனல் அமெரிக்காவின் வெனிசுலா தாக்குதலை "அரசு பயங்கரவாதம்" என்று கண்டித்தார் X தளத்தில் பதிவு வெளியிட்டார்.
அமெரிக்கா லத்தீன் அமெரிக்க பகுதியில் நீண்ட காலம் ராணுவ தாக்குதல்களை செய்து வருகிறது. இதில் 1961 ஆம் ஆண்டு பே ஆஃப் பிக்ஸ் படையெடுப்பு முக்கிய இடம் பிடிக்கிறது.
1961 ஏப்ரல் மாதம் கியூபாவின் பே ஆஃப் பிக்ஸ் பகுதியில் கியூபா புரட்சிக்குப் பிறகு காஸ்ட்ரோ அரசு சோவியத் யூனியனுடன் நெருக்கம் காட்டியது. இதை தடுக்க அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ கியூபா நாடுகடத்தப்பட்டவர்களை பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கியது. சுமார் 1,400 பேர் கொண்ட படை கியூபாவில் தரையிறங்கியது. படையெடுப்பு தொடங்கிய சில மணி நேரங்களில் காஸ்ட்ரோவின் படைகள் அதை முறியடித்தன. பலர் கொல்லப்பட்டனர், சுமார் 1,200 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இதன் பின்பு அமெரிக்கா கியூபாவில் எவ்விதமான தாக்குதல்களையும் செய்யவில்லை.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!



Click it and Unblock the Notifications