மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் குறைக்கும் வகையில் நேற்றும் டிரம்ப், ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதை ஈரான் தரப்பில் மறுத்தாலும், டிரம்ப் அறிவிப்பு வெளியான 12 மணிநேரத்தில் அமெரிக்க- இஸ்ரேல் படைகள் ஈரானின் 2 முக்கிய எரிவாயு தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் மூலம் மீண்டும் வளைகுடா நாடுகள் மத்தியில் போர் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளது. எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து புதிய தாக்குதல்கள் நடைபெற்றதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் டிரம்ப் 5 நாட்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் என அறிவித்த பின்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் குற்றச்சாட்டு
Fars News Agency வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திங்கட்கிழமை அதிகாலை Isfahan மற்றும் Khorramshahr ஆகிய நகரங்களில் உள்ள எரிசக்தி மற்றும் எரிவாயு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் சில கட்டிடங்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இஸ்பஹானில் தாக்குதல்
இஸ்பஹான் நகரில், கவே (Kaveh) தெருவில் அமைந்துள்ள எரிவாயு நிர்வாக கட்டிடம் மற்றும் pressure குறைப்பு நிலையம் மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் கட்டமைப்பின் சில பகுதிகள் சேதமடைந்ததுடன், அருகிலுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நகரம், ஈரானின் எரிவாயு விநியோக அமைப்பில் முக்கிய மையமாக செயல்படுகிறது. பல பெரிய நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இங்கிருந்து எரிவாயு விநியோகம் நடைபெறுவதால், இங்கு நடந்த தாக்குதல் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குர்ரம்ஷஹரில் தாக்குதல்
அதே நேரத்தில், குர்ரம்ஷஹர் பகுதியில் உள்ள மின்நிலையத்துடன் தொடர்புடைய எரிவாயு குழாயை குறிவைத்து ஒரு ப்ராஜெக்டைல் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த தாக்குதல் முக்கிய கட்டமைப்பை நேரடியாக தாக்கவில்லை என்றும், பைப்லைன் நிலையத்திற்கு வெளியே விழுந்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது என்றும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திலும் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

ஏன் இந்த இடங்களில் தாக்குதல்?
இஸ்பஹான் மற்றும் குர்ரம்ஷஹர் ஆகிய நகரங்கள், ஈரானின் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, எரிவாயு விநியோகம் மற்றும் மின்சாரம் உற்பத்தி தொடர்பான கட்டமைப்புகள் இங்கு அமைந்துள்ளதால், இந்த இடங்கள் தாக்குதலுக்கான முக்கிய இலக்குகளாக கருதப்படுகின்றன.
டிரம்ப் அறிவிப்புக்கு முரண்பாடு
இந்த தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பின்னர் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டதாகவும், சமாதான பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த தாக்குதல்கள் உண்மையில் நடைபெற்றிருந்தால், அந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை மீதான கேள்விகளை எழுப்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் டிரம்ப்-ன் பேச்சும், பதிவுகள் மீதான நம்பகதன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
உலகளாவிய பதற்றம்
டிரம்ப்-ன் போர் நிறுத்த பேச்சால் நேற்று மாலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, தங்கம் விலை உயர்ந்தது, பங்குச்சந்தை குறியீடுகளும் உயர்ந்தது. ஆனால் இந்த புதிய தாக்குதல் குறித்த தகவல்கள், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் மீண்டும் அச்சத்தை அதிகரித்துள்ளது.
சமாதான முயற்சிகள் தொடரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சந்தைகள், இந்த தாக்குதல்கள் குறித்து வரும் தகவல்களால் மீண்டும் பதற்றத்தில் சிக்கியுள்ளன.
எந்த திசை..
மொத்தத்தில், அமெரிக்கா-ஈரான் மோதலில் தகவல் முரண்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒருபுறம் சமாதான பேச்சுவார்த்தைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் நிலையில், மறுபுறம் தாக்குதல்கள் தொடரும் தகவல்கள் வெளியாகின்றன.
இதனால், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்பதையும், அடுத்த கட்டத்தில் இந்த மோதல் எந்த திசையில் நகரும் என்பது மிக முக்கியமானதாக இருப்பதையும் இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய், LPG, LNG வாங்குவதில் போட்டி! கத்தாருக்கு பறந்த மத்திய அமைச்சர்!



Click it and Unblock the Notifications