டொனால்டு டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி மற்றும் அபராத வரி என இரண்டு பெயரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுமார் 50% வரியை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பால் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் எந்த அளவுக்கு பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என தொடர்ந்து வெளியாகி வருகிறது.
டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி என்பது ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குள் இந்தியா - அமெரிக்கா மத்தியில் வர்த்தக பேச்சுவார்த்தை எட்டப்படுமா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் இதேவேளையில், பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ஆகியோரை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

டிரம்ப் விதித்த வரியால் பல துறைகள் பாதிக்கப்பட்டாலும், சில முக்கியமான துறைகள் அதிகம் பாதிக்கப்பட உள்ளது. உதாரணமாக இறால் வளர்ப்பு துறை, ஆடை தயாரிப்பு.. இப்படி அதிகப்படியான ஊழியர்கள் சார்ந்து இயங்கும் துறைகள் இந்த வரி மூலம் பாதிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து அதிகம் பாதிக்கப்படபோகும் துறையாக அரிசி விளைவிக்கும் விவசாயிகளும், அரிசி ஏற்றுமதியாளர்களும் உள்ளனர்.
டிரம்ப்-ன் 50 சதவீத வரியால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வீடுகளில் அன்றாட உணவாக சமைக்கும் அரிசி விலை 50% வரை உயரலாம், அல்லது பாகிஸ்தான் அரிசியை தேர்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் என்ற அச்சம் உள்ளது.
இந்தியா ஆண்டுக்கு சுமார் 2.5 லட்சம் டன் அரிசியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது, இதில் பெரும் பகுதி அரிசி அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் முக்கிய உணவாக பார்க்கப்படுகிறது. தற்போதை வரி விதிப்பு மூலம் அரிசி விலையை உயர்த்துவது மட்டும் அல்லாமல் மக்கள் பாகிஸ்தான் வகை அரிசிக்கு மாற வேண்டிய நிலை உருவாகும் அளவுக்கு நிலைமை உள்ளது என்பது வருத்தமான விஷயமாக உள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியில் சுமார் 40% சோனா மசூரி வகையாகும், இது ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் விளைவிக்கப்படுகிறது. மீதமுள்ள 60% பாஸ்மதி அரிசி ஆகும், இது பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு மாநிலங்களில் விளைவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், அன்றாட உணவுக்கு சோனா மசூரி அரிசியை பயன்படுத்தியும், பிரியாணி போன்ற முக்கியமான உணவுகளுக்கு பாஸ்மதி அசிரியை தேர்வு செய்யும் வழக்கத்தை கொண்டு உள்ளது.
இந்த நிலையில் டிரம்ப்-ன் 50 சதவீத வரி விதிப்புக்கு முன்பு சோனா மசூரி அரிசி ஒரு டன்னுக்கு 900-1000 டாலர்கள் என்றும், பாஸ்மதி 1200-1300 டாலர்கள் என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. டிரம்ப்-ன் வரி விதிப்பால் அமெரிக்காவில் அரிசியின் விலைகள் பெரிதும் உயர்ந்து, இந்திய அரிசிகள் மக்களுக்கு காஸ்ட்லியாக மாறலாம்.
தற்போது டிரம்ப் விதிக்கப்பட்டு இருக்கும் 50 சதவீத வரி நடைமுறைக்கு வந்தால் இந்திய பாஸ்மதி அரிசி விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1200 டாலர்களிலிருந்து 1800 டாலர்களாக உயரலாம். இதே நேரத்தில், பாகிஸ்தான் பாஸ்மதி அரிசி மீது 19% வரி மட்டுமே அமெரிக்கா விதிக்கப்பட்டு உள்ளதால் இதன் விலை 1450 டாலர்களாக இருக்கும், இது இந்திய அரிசியை விட 350 டாலர்கள் குறைவு.
இந்தியா ஆண்டுக்கு 3 லட்சம் மெட்ரிக் டன் பாஸ்மதி அரிசியை 350 மில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது, அதேசமயம் பாகிஸ்தான் 1.8 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்கிறது. இதனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாகிஸ்தான் அரிசியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம், இந்தியாவின் 40% பாஸ்மதி உற்பத்தியை கொண்டுள்ளதால், இந்த வரி உயர்வால் மிகவும் பாதிக்கப்படும் மாநிலமாக விளங்குகிறது. இந்த வரி விதிப்பு இந்திய-அமெரிக்க உறவில் தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவில் உள்ள இந்திய அமைப்பு இண்டியாஸ்போரா கூறியுள்ளது.
இந்த வரி உயர்வு, இந்திய அரிசி உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தைகளை தேட வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு, உணவு பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் இது இந்திய அரிசியின் தரத்தை உலகளாவிய சந்தையில் மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாகவும் அமையலாம். இதேவேளையில் அமெரிக்காவில் இருக்கும் பல லட்சம் இந்திய மக்களையும் இது பாதிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? அமெரிக்க அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

தொடர்கிறது ஈரான் போர்!! நாளை காலை 10 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கிறது என அறிவித்த டிரம்ப்!!

டிரம்ப் அலுவலகத்திலேயே கருப்பு ஆடு? போர் ரகசியங்களை வைத்து வியாபாரமா? ஊழியர்களுக்கு தடை?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?



Click it and Unblock the Notifications