அமெரிக்காவின் 25% கூடுதல் வரி உயர்வு, இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகளை பெரிதும் பாதிக்க உள்ளது. 2024 ஆம் ஆண்டு அடிப்படையில், இந்தியாவின் அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி சுமார் 87 பில்லியன் டாலர்களாக உள்ளது, இது இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 17.90% ஆகும்.
இந்த வரி உயர்வு, இந்தியாவின் எந்த துறைகளை அதிகம் பாதிக்கும் என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வியாக உள்ளது. இப்படியிருக்கையில் பல கோடி வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளன. கணக்குப்போட்டால் பார்மா மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் துறை தான் அதிகம் பாதிக்கப்பட போகும் துறையாக இருக்க வேண்டும், ஆனால் இத்துறை இறக்குமதிக்கு டிரம்ப் வரி விதிப்பில் விலக்கு கொடுக்கப்பட்டதால் இத்துறைகள் தப்பித்து.

முக்கிய ஏற்றுமதி துறைகளின் தாக்கம்
டெக்ஸ்டைல் துறை:
இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, அமெரிக்காவுக்கு சுமார் 5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதியை மேற்கொள்கிறது. இதில் பெரும் பங்கை தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் பங்கு வகிக்கிறது. இது இந்திய ஏற்றுமதியில் சுமார் 25% அளவைக் கொண்டுள்ளது. இந்த துறையில் 4.5 கோடி பேர் வேலை செய்கின்றனர். எனவே இத்துறையில் 50 சதவீதம் அளவிலான வரி விதிக்கப்பட்டு உள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, பெரும் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படலாம்.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களின் ஆர்டர்கள் வரி விதிப்பால் விலை அதிகரிக்கும் காரணத்தால் பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
வைரங்கள், தங்க மற்றும் வெள்ளி நகைகள்:
வைரங்கள், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை உள்ளடக்கிய நகை துறை, 9.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் இத்துறை மொத்த ஏற்றுமதியில் சுமார் 28-30% அமெரிக்காவுக்குச் செல்கிறது. உலகளாவிய மந்தநிலையும் தங்க விலை மாறுபாடுகளும் மத்தியில் இந்த 50 சதவீத வரி கூடுதல் சவால்களை ஏற்படுத்துகின்றன.
இன்ஜினியரிங் பொருட்கள்:
இன்ஜினியரிங் பொருட்கள், குறிப்பாக இயந்திரங்கள் மற்றும் வாகன பாகங்களை அமெரிக்காவுக்கு 6.5 பில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்க நிறுவனங்கள் மெக்சிகோ, சீனா அல்லது அமெரிக்க நிறுவனங்களுக்கு திரும்பலாம், இது மேக்-இன்-இந்தியா மற்றும் PLI திட்டங்களின் வளர்ச்சியை பாதிக்கலாம்.
விவசாயம்:
விவசாய பொருட்கள், குறிப்பாக அரிசி, மசாலாப் பொருட்கள், தேநீர் மற்றும் காபி, 820 மில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை இந்திய வம்சாவளினரின் முக்கிய தேவையாக இருக்கும் காரணத்தால் இந்த 50 சதவீத வரி அமெரிக்க சந்தைகளில் இதன் விலையை பெரிய அளவில் உயர்த்தும். இதனால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படலாம்.
ஸ்டீல் டூ பெட்ரோலியம்:
எஃகு, கெமிக்கல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவற்றில் மொத்தம் 8.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 50 சதவீத வரி விதிப்பால் இந்திய தயாரிப்புகள் விலை உயரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி வியட்நாம் மற்றும் பிரேசில் போன்ற போட்டி நிறுவனங்கள் இந்திய வர்த்தகத்தை கைப்பற்றலாம்.
கடல் உணவு:
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இறால் ஏற்றுமதி நடக்கிறது. இது இந்தியாவின் மொத்த 5.6 பில்லியன் டாலர் இறால் ஏற்றுமதியில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய இறால் வர்த்தகத்தில் அமெரிக்க 40% பங்கைக் கொண்டுள்ளது. இந்த 50 சதவீத வரியால் இத்துறையும் அதிகம் பாதிக்கப்படும்.
மோடி அரசின் திட்டம்:
இந்த சவாலை எதிர்கொள்ளவும், டிரம்ப் கொடுத்துள்ள 21 நாள் அவகாசத்தில் இந்திய அரசு அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும், அக்டோபர் 2025க்குள் ஒப்பந்தம் முடிவடைந்தால் வரிகள் குறையலாம். இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு சாதகமாக சில முடிவுகளை இந்திய எடுக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த 50% வரி உயர்வு, வெறும் வர்த்தக பிரச்சினையல்ல, இது புவியியல் அரசியல் அழுத்தமாகவும் உள்ளது. இந்தியாவுக்கு இதன் பொருளாதார விளைவுகள் மிகவும் பெரியவை, ஆனால் திறமையான பேச்சுவார்த்தை மற்றும் மாற்று உத்திகள் மூலம் இதை சமாளிக்க முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications