டிரம்ப் குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் ஒருப்பக்கம் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துவிட்டு தற்போது அமெரிக்காவின் வர்த்தக துறை தன் நாட்டிற்கும், தன் நாட்டு மக்களுக்கு மட்டும் தான் என்ற மிகப்பெரிய நெருக்கடியை டிரம்ப் தலைமையிலான அரசு உருவாக்கியுள்ளது.
அமெரிக்க சிறு வணிக நிர்வாகம் (SBA) பிப்ரவரி 2, 2026 அன்று மாபெரும் கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்க குடியுரிமை இல்லாதவர்கள், கிரீன் கார்ட் (legal permanent residents) உடையவர்கள் உட்பட SBA ஆதரவு பெற்ற வணிக கடன்களை பெற முடியாது. இந்த விதி மார்ச் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" பொருளாதார கொள்கைக்கு இணையாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அமெரிக்க நிதி சந்தையில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய திருத்தங்களில் ஒன்றாகும்.
ஏற்கனவே டிரம்ப் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு யாரும் வர கூடாது என்பதற்காக விசா கட்டுப்பாடுகளை கடுமையாக உயர்த்தியிருக்கும் வேளையில், தற்போது நிதியுதவி பிரிவிலும் கட்டுப்பாடுகள் உருவாகி வருகிறது. சரி முதலில் அமெரிக்க சிறு வணிக நிர்வாக கடன் திட்டம் என்றால் என்ன என்பதை முதலீல் பார்ப்போம்.
SBA கடன்கள் என்றால் என்ன..?
US Small Business Administration (SBA) என்பது ஒரு அரசு அமைப்பு, இது வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ கிடையாது. அமெரிக்காவில் சிறு வணிகளை காக்கும் விதிமாக உருவாக்கப்பட்டது தான் இந்த அமைப்பு.
SBA ஆதரவு கடன்கள் என்பது அமெரிகாவில் இயங்கி வரும் சிறு வணிகங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் அளிக்கப்படும் கடன். SBA அமைப்பு இந்த கடன்களை நேரடியாக வழங்காவிட்டாலும், கடனின் ஒரு பகுதிக்கு வங்கிகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதனால் வங்கிகளின் ரிஸ்க் குறைந்து சிறு வணிகங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கிறது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் மூலம் SBA-யின் கடன் திட்டங்களில் உரிமை மற்றும் தகுதி விதிகளை கடுமையாக்குகிறது. இந்த மாற்றம் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் உட்பட அனைத்து நாட்டினரும் வணிகங்களை துவங்குவதும், இயக்குவதை பாதிக்கும். இது அரசு அமைப்பு எடுத்துள்ள முடிவு என்பதால், இதை மெல்ல மெல்ல மற்ற வங்கிகளும் பாலோ செய்ய வாய்ப்புள்ளது என்ற அச்சம் உருவாகியுள்ளது.
புதிய விதிகள் சொல்வது என்ன..?
புதிய விதிகளின்படி SBA கடன் விண்ணப்பதாரர்கள் 100 சதவீத உரிமை அமெரிக்க குடிமக்கள் அல்லது அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் நாடுகளில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களாக இருக்க வேண்டும். இந்த கொள்கை அமெரிக்கர்களை வணிகம் தொடங்கவும் வளர்க்கவும் ஆதரிப்பதற்காக SBA கொண்டுவரப்பட்ட மாற்றமாக தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் வெளிநாட்டில் இருந்து அமெரிகாவுக்கு வந்து நடத்தப்படும் வணிகங்களுக்கு பெரும் சவாலாக அமையும். அமெரிக்காவில் இந்தியர்கள், சீனர்கள், இலங்கையர்கள், வங்கதேசத்தினர் உள்ளிட்ட ஆசியாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் சிறு வணிகங்களை நடத்துகின்றனர். இந்த கடன் ஆதரவு இல்லாவிட்டால் அவர்களின் வணிக வளர்ச்சி பாதிக்கப்படும். இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
SBA கடன் இல்லையெனில் வேறு வங்கிகளில் கடன் வாங்க முடியாமல் இல்லை, இந்த அமைப்பின் வாயிலாக கடன் வாங்கும் போது வட்டி குறைவாகவும், கடனுக்கான உத்தரவாதத்துடன் கிடைக்கும். இல்லையெனில் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் வணிக கடன் பெறுவது இனி வரும் காலத்தில் கடினமாகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் கிரீன் கார்ட் வைத்திருந்தாலும், அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் சலுகை தடை பெறுவதால், இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
More From GoodReturns

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?



Click it and Unblock the Notifications