ஐதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிரம்ப் டவர்களை கட்டமைக்க இருக்கிறது. ஐதராபாத் நகருக்கு அருகே இருக்கும் கொக்காபெட் பகுதியில் டிரம்ப் டவர்ஸ் கட்டப்பட இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
ஐதராபாத்தின் பணக்கார பகுதியாக பார்க்கப்படும் கோல்டன் மைல் பகுதியில் தான் டிரம்ப் டவர் கட்டப்பட இருக்கிறது . 63க்கும் அதிகமான தளங்கள் கொண்ட இந்த கட்டிடம் ஐதராபாத் நகரின் அடையாளமாக மாறப்போகிறது. டிரம்புக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மிகப்பெரிய கட்டுமான திட்டமாக இந்தியாவில் இது அமையப் போகிறது. நான்கு ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டுமான பணிகள் நடைபெற இருக்கின்றன.இதற்காக 3,500 கோடி ரூபாயை டிரம்ப் நிறுவனம் முதலீடு செய்கிறது.

இந்தியாவில் டிரிபேகா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் தான் டிரம்ப் நிறுவனத்துடன் கூட்டு நிறுவனம் அமைத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஐதராபாத் டிரம்ப் டவரையும் இந்த நிறுவனமே கட்ட இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே பணிகள் தொடங்கப்படும் என்றும் டிரிபேகா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைக்கு இந்தியாவில் டிரம்புக்கு சொந்தமான நிறுவனம் கட்டியம் டிரம்ப் டவர் குடியிருப்புகள் மும்பையின் வோர்லி பகுதியில் அமைந்துள்ளது. இது 78 அடுக்குமாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பாகும். அதேபோல புனே ,கொல்கத்தா மற்றும் குர்குவான் நகரங்களிலும் டிரம்ப் டவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிரம்புக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தியாவில் ஐதராபாத் ,பெங்களூரு, நொய்டா மற்றும் புனே ஆகிய பகுதிகளில் புதிதாக ஆறு கட்டுமான திட்டங்களை கையில் எடுத்திருப்பதாக தகவல் தெரிவித்தது. இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்தால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக டிரம்ப் டவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு நாடாக இந்தியா இருக்கும்.
டிரம்ப் டவர் அடுக்குமாடி குடியிருப்பு கிளப் ஹவுஸ் , விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பல்வேறு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கும். ஐதராபாத்தில் டிரம்ப் டவர் கட்டுமான பணி தொடங்கி நிறைவு பெறுவதற்கு நான்கு ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் கட்டப்படும் இந்த டவரில் 400 வீடுகள் இருக்கும் என்றும் இதில் ஒரு சதுர அடியின் மதிப்பு 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 4 கோடி ரூபாயில் இருந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் விற்கப்படுகின்றன.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!



Click it and Unblock the Notifications