அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை தொடர்ந்து எடுத்து வருகிறார். அதன்படி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் சிறந்த மாணவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக தற்போது "கோல்ட் கார்டு" என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதன் மூலம் அமெரிக்க வணிகங்களுக்கு திறமையான ஊழியர்களை வழங்கவும், பணக்கார புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவிலேயே தங்க வைக்கவும் இந்த நடைமுறையைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் முக்கியமாக அமெரிக்காவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். வைட் ஹவுஸின் ஓவல் ஆபீஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க அரசாங்கம் விரைவில் கோல்டன் கார்டை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்தார். இந்த கோல்ட் கார்டை ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் நாட்டில் நல்ல திறமையான மாணவர்களை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.

அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராக இருக்கும் வெளிநாட்டினருக்கு EB-5 விசாவிற்கு பதிலாக இந்த கோல்டன் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அமெரிக்க கல்லூரியில் திறம்பட செயல்படும் மாணவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனங்களிடமிருந்து தனக்கு அழைப்பு வருவதாகவும், இந்த மாணவர்கள் குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பல இடங்களிலிருந்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிப்பதாகவும், ஆனால் அமெரிக்காவிலேயே தங்குவார்களா என்று உறுதியாக தெரியாததால் நிறுவனங்கள் அவர்களை பணியமர்த்துவதில்லை என்றும் தெரிவித்தார். எனவே நிறுவனங்கள் இந்த கோல்டன் கார்டை வாங்கிக் கொண்டால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் சிறந்த சர்வதேசமாணவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
சில மாணவர்கள் தங்களின் குடியேற்றம் குறித்த நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும், இதனால் திறமையானவர்களை ஈர்ப்பதற்காகவும், தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அமெரிக்க நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். குறிப்பாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள், ஊழியர்களை நிரப்புவதில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன.
இதனால் அதிக திறன் கொண்ட ஊழியர்களின் தேவை இருந்து வருகிறது. பணக்காரர்களை சட்டபூர்வமாக அமெரிக்காவில் குடியேற்றி முதலீடு செய்ய வரவேற்பதே இந்த கோல்டன் கார்டின் நோக்கமாகும். அதோடு ஆட்சேர்ப்பு செயல்முறைக்கும் இந்த கோல்டன் கார்டை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை இந்த கோல்டன் கார்டு நடைமுறை வெற்றி பெற்றால் அது அமெரிக்காவின் 35 ட்ரில்லியன் டாலர் கடனை நீக்க உதவும். உதாரணமாக ஒரு மில்லியன் கோல்டன் கார்டுகள் வழங்கப்பட்டால் அமெரிக்க அரசாங்கம் 5 ட்ரில்லியன் டாலர் சம்பாதிக்கும். 10 மில்லியன் கோல்டன் கார்டுகள் வழங்கப்பட்டால் 50 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும்.இதனால் அமெரிக்காவின் 35 ட்ரில்லியன் கடன் ஈடு செய்யப்படும்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications