TCS, Infosys நிறுவனங்களுக்கு செக் வைத்த டிரம்ப்.. ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்..!!

அமெரிக்காவில் அண்மை காலமாகவே ஹெச்1பி விசா முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அதாவது ஐடி நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்காமல் வெளிநாட்டில் இருந்து குறைந்த ஊதியத்தில் ஹெச்1பி விசாவில் ஊழியர்கள் வரவழைக்கப்படுகின்றனர் என சொல்லப்படுகிறது.

டிரம்ப் அரசு ஹெச்1பி விசா வழங்குவதில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தனை எளிதாக தற்போது விசா கிடைத்துவிடுவதில்லை. இந்நிலையில் அமெரிக்க அரசு ஹெச்1பி விசா புகார்கள் தொடர்பாக மைக்ரோசாப்ட் , இன்ஃபோசிஸ் , டிசிஎஸ் , விப்ரோ , காக்னிசென்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் திட்டத்தில் தடைகளை விதித்துள்ளது.

TCS, Infosys நிறுவனங்களுக்கு செக் வைத்த டிரம்ப்.. ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்..!!

அமெரிக்க மோசடி தடுப்பு பிரிவு மற்றும் அமெரிக்க தொழிலாளர் துறை இணைந்து இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 8 முக்கிய நிறுவனங்கள் இந்த தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

1.மைக்ரோசாப்ட் (Microsoft)

2. அடோப் (Adobe)

3. இன்ஃபோசிஸ் (Infosys)

4. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS )

5. விப்ரோ (Wipro)

6. ஹெச்சிஎல்டெக் (HCLTech)

7. காக்னிசென்ட் (Cognizant)

8. கேப்ஜெமினி (Capgemini)

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்று தற்காலிகமாக பணியாற்றும் திறமையான வெளிநாட்டு ஊழியர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் கிரீன் கார்டு பெற வேண்டும். இதற்கு Permanent Labor Certification Programme (PERM) எனப்படும் சான்றிதழ் பெறுவது கட்டாயம்.

Also Read

ஆனால் இந்த தடை காரணமாக, அமெரிக்க தொழிலாளர் துறை இந்த 8 நிறுவனங்களிடம் இருந்து புதிய PERM விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது; மேலும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் மீதான பரிசீலனைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமையாளர்களை தேர்ந்தெடுக்க உருவாக்கப்பட்ட இந்த விசா முறையை, அமெரிக்க ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க பயன்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் என கூறியுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் , ஹெச்1பி விசா மூலம் வேலைக்கு அமர்த்தப்படுவோரை வெளிநாட்டு கொத்தடிமை ஊழியர்கள் என்றும், இந்த முறையை பயன்படுத்தும் நிறுவனங்களை விசா ஆலைகள் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Recommended For You

குறிப்பா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்த அவர், அமெரிக்காவில் எந்த நிறுவனமும் இந்த முறையை மைக்ரோசாப்டை விட அதிகமாக துஷ்பிரயோகம் செய்ததில்லை என குற்றம் சாட்டினார். 2025ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 6,000 அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டு, மறுபுறம் 6,000-க்கும் மேற்பட்டஹெச்1பி விசா அனுமதிகளை பெற்றதுடன், 3,682 PERM விண்ணப்பங்களையும் தாக்கல் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுவாகவே ஹெச்1பி விசாவில் அமெரிக்கா செல்லும் ஐடி ஊழியர்களில் 70% அதிகமானவர்கல் இந்தியர்கள். அதாவது இந்திய டெக் நிறுவனங்களும் அமெரிக்க டெக் நிறுவனங்களும் ஹெச்1பி விசாவில் அதிகமாக இந்தியர்களை தான் பணிக்கு அமர்த்துகின்றன. இந்த சூழலில் ஹெச்1பி விசா கெடுபிடிகள் தற்போது PERM விண்ணப்பம் செய்ய தடை ஆகியவை இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நெருக்கடியை தந்துள்ளன.

PERM செயல்முறை முடங்குவதால், ஹெச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் 6 ஆண்டுகள் விசா காலம் முடிந்ததும் கிரீன் கார்டு நடைமுறைக்கு மாற முடியாமல் சிக்கலை சந்திக்க நேரிடும். இதனால் அவர்கள் விசா காலாவதியாகும் போது அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

You May Also Like

ஐடி நிறுவனங்களை தாண்டி, அமெரிக்க அரசாங்கம் தனது நடவடிக்கைகளை கல்வித் துறைக்கும் விரிவுபடுத்தியுள்ளது. ஹார்வர்ட், யேல் , ஸ்டான்போர்ட் உள்ளிட்ட 9 முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களை கொண்டு வந்து அமெரிக்கர்களின் ஊதியத்தை குறைக்க முயன்றன என்ற புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+