அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க முதலீடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதன் காரணமாக சீன நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது. மேலும் ட்ரம்ப்பின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை ஹேங் செங் டெக் குறியீடு 4.4% வரை சரிந்தது. இது நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவைக் குறிக்கிறது. ஹாங் செங் டெக் குறியீடு என்பது ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்திறனைக் கண்காணிக்கும் ஒரு குறியீடாகும். அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட் பங்குகள் 7.9 சதவிதம் வரை சரிந்தன. அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்களின் செயல்திறனைக் கண்காணிக்கும் நாஸ்டாக் கோல்டன் டிராகன் என்ற சீன குறியீடும் ஒரே இரவில் 5.2% குறைந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் வலுவான வளர்ச்சி தென்பட்டது. இந்த உயர்வு முக்கியமாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டீப்சீக் போன்ற புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
ஏற்கனவே டொனால்ட் ட்ரம்ப் ரெசிபிராக்கல் வரிமுறையை அறிமுகம் செய்ததால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் சிக்கலானதாக இருந்து வருகிறது. எந்த நாடு அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ அந்த நாடுகளுக்கெல்லாம் இந்த வரி முறை தான் பொருந்தும். இதன் மூலம் எந்தெந்த நாடுகள் அமெரிக்காவிற்கு வரிவிதிக்கிறதோ? அதற்கு இணையாக அமெரிக்காவும் வரிவிதிப்பு செயல்முறையை கையில் எடுக்கும். தற்போது ட்ரம்ப் வெளியிட்டுள்ள புதிய உத்தரவுகள் இந்த பதட்டத்தை இன்னும் அதிகரித்துள்ளன.
அதோடு இந்த வார இறுதியில் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளர்களை கடுமையாக கண்காணிக்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். ஏற்கனவே கூறியது போல் இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் டெக்னாலஜியில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக முதலீட்டாளர்களின் அதீத நம்பிக்கையை பெற்று வந்தன.
ஆனால் சமீபத்திய சந்தை வீழ்ச்சி, அபாயங்கள் எழும்போது முதலீட்டாளர்களின் மனநிலை எப்படி எல்லாம் மாறக்கூடும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. என்னதான் பங்குகளில் வீழ்ச்சி இருந்தாலும் ஹாங் செங் டெக் குறியீடு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!



Click it and Unblock the Notifications