அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி தொடர்பான உத்தரவை ரத்து செய்துள்ளது. இது டிரம்பின் இரண்டாவது ஆட்சியின் முக்கிய அறிவிப்புக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
டொனால்டு டிரம்ப் பிப்ரவரி 2025இல் தேசிய அவசர சட்டத்தின் கீழ் (IEEPA) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரெசிப்ரோக்கல் வரிகள், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி உலகின் பெரும்பலான நாடுகள் மீது வரி அமல்படுத்தப்பட்டன. இதனால் சர்வதேச பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த வரியை எதிர்த்து பல தரப்பு வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பல கட்ட விசாரணை, தீர்ப்பு அறிவிப்பதை ஒத்திவைக்கப்பட்டது என அனைத்தையும் கடந்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது.

இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் ரெசிப்ரோக்கல் வரி குறித்த விசாரணையில், பல நீதிபதிகள் அடங்கிய பென்ச் 6-3 வாக்கெடுப்பில் டிரம்ப் அறிவித்த ரெசிப்ரோக்கல் வரி உத்தரவை செல்லாது என்று தீர்ப்பளித்தது.
வரி உத்தரவின் பின்னணி
டிரம்ப் ஆட்சியில் ஏப்ரல் 2025இல் விடுதலை தினத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இந்த "ரெசிப்ரோக்கல்" வரிகள், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டது. IEEPA சட்டம் பொதுவாக தேசிய அச்சங்களுக்கு பயன்படுத்தப்படும், ஆனால் டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உலகின் அனைத்து நாடுகளுக்கும் வரிகளை விதித்தார்.
இத்தகைய செயல்பாட்டை IEEPA சட்டம் அனுமதி அளிக்காது என்று விமர்சகர்கள் கூறினர். இந்த வரிகள் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது, குறிப்பாக இறக்குமதி பொருட்களின் விலை உயர்ந்தது.
நீதிமன்ற தீர்ப்பு
நீதிமன்றம் அமெரிக்க அரசியலமைப்பின் உரையை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்தது. "வரிகள், கட்டணங்கள், இறக்குமதி வரிகள் வசூலிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கு உள்ளது" என்று அரசியலமைப்பு கூறுகிறது.
"அமெரிக்கா உலகின் அனைத்து நாடுகளுடனும் போரில் இல்லை" என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் எழுதியுள்ளார். இதனால் அனைத்து நாடுகள் மீதும் வரி விதிப்பது ஏற்புடையது அல்ல. மேலும் இந்த வழக்கின் டிரம்ப் அரசின் வாதம் ஏற்கப்படவில்லை. இந்த தீர்ப்பு டிரம்பின் கொள்கைக்கு பெரும் இடையூறு, ஆனால் ஸ்டீல், அலுமினியம் போன்ற துறை சார்ந்த வரிகளை பாதிக்காது.
மொத்தத்தில், இந்த தீர்ப்பு அமெரிக்க அரசியலமைப்பின் பலத்தை காட்டியுள்ளது மட்டும் அல்லாமல், டிரம்ப் போன்ற நபர்கள் சட்டத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது என கடுமையான வார்த்தகளால் நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications