படுதோல்வி அடைந்த டிரம்ப்.. இந்தியாவுக்கு மறைமுக ஜாக்பாட்.. எப்படி தெரியுமா..?

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதிக்கத்தைத் தீர்மானிக்கும் மிட்டேர்ம் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. டிரம்ப்-ன் தோல்வி என்பது இந்தியாவுக்குச் சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு அமெரிக்கா - இந்தியா மத்தியிலான முரண்பாடுகள் களையப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகம், புவிசார் அரசியல் மற்றும் நிதிச் சந்தை சார்ந்த நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படுதோல்வி அடைந்த டிரம்ப்.. இந்தியாவுக்கு மறைமுக ஜாக்பாட்.. எப்படி தெரியுமா..?

டிரம்ப் 2 வருடத்திற்கு முன்பு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து வரி விதிப்பு மற்றும் வரி விதிப்பு மிரட்டல் மூலம் உலக நாடுகளைப் பாடாய் படுத்தி வந்தார்.

இந்த மிரட்டல் மூலம் அண்டை நாடான கனடா உடனான நட்புறவும் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் நிற்கிறது. இந்த நிலையில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் தற்போது ஜனநாயக கட்சி ஆதிக்கம் பெற்ற நிலையில், டிரம்ப் வரி விதிப்பு மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு எத்தகைய நன்மை கிடைத்தது எனக் கேள்விகளை முன்வைக்கலாம்.

இதன் மூலம் இந்தியா உட்பட பல நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரி விதிப்பும், வர்த்தக தடையும் நீக்கப்படலாம். இதேபோல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்-ன் கட்சி வலிமை இழந்த காரணத்தால் புதிய வரி விதிப்பு, கட்டுப்பாடுகளைத் தன்னிச்சையாகச் செய்ய முடியாத நிலைக்கு டிரம்ப் தள்ளப்படுவார். டிரம்ப்-ன் விரி மீதான எதிர்க்கட்சியின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறும்.

அடுத்தாக இத்தேர்தல் முடிவுகள் அமெரிக்கப் பத்திர சந்தையில் வட்டி விகிதம் குறைந்தால் டாலர் ஆதிக்கம் குறைந்து இந்தியா வலிமை அடையும். அமெரிக்கப் பத்திர முதலீட்டின் லாபம் குறைந்து, ரூபாய் மதிப்பு நிலைப்பெற்று வலிமை அடையும்போது வெளிநாட்டு முதலீடுகள் பங்குச்சந்தையில் அதிகரிக்கும். முக்கியமாக இறக்குமதி செலவுகள் குறைந்து, உலகளாவிய பொருளாதாரம், பணவீக்கம் அச்சங்கள் குறையும்.

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி ஆதிக்கம் செலுத்தும் காரணத்தை ஈரான் போரில் இருந்து டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தை முழுமையாகப் பின்வாங்க கோரி மசோதாவை முன்வைக்கலாம். அவை இரு அவைகளிலும் ஒப்புதல் பெறுவது மூலம் விரைவில் போர் முடிவுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 70 டாலருக்குச் செல்ல துவங்கும். இதனால் இந்தியாவின் இறக்குமதி செலவு குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும், ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து காப்பாற்றப்படும், பணவீக்கம் குறையும்.

இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்படு இருக்கும் வேளையில் அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடக்கும் பட்சத்தில் FTA ஒப்பந்தம் செய்யும் பணிகள் வேகப்படுத்தப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+