ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி.. ஜி ஜின்பிங் - விளாடிமிட் புடின் உதவியை நாடும் டிரம்ப்!!

அமெரிக்கா - இஸ்ரேல் துவங்கிய ஈரான் போர் முடிவுக்கு வராமல் இருக்கும் வேளையில், டிரம்ப் புதிய திட்டத்தைத் தீட்டி வருகிறார். ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான், கத்தார், ஒமான் எனப் பல மத்தியஸ்தர்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்கு எவ்விதமான முன்னேற்றமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்தகட்ட முயற்சியாக அடுத்த வாரம் நடக்க இருக்கும் APEC கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் உடனான பேச்சுவார்த்தை மூலம் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் 2 விஷயங்களுக்குத் தீர்வு காணப்படத் திட்டமிட்டு உள்ளார் டிரம்ப்.

ஈரான் போருக்கு முற்றுப்புள்ளி.. ஜி ஜின்பிங் - விளாடிமிட் புடின் உதவியை நாடும் டிரம்ப்!!

APEC கூட்டத்தில் நடக்க இருக்கும் 3 தலைவர்கள் சந்திப்பு மூலம் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதைக் கைவிடுவதும், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் இருக்கும் pickaxe மலைகளுக்கு அடியில் அமைந்திருக்கும் யூரேனியம் செறிவூட்டும் திட்டத்தை மொத்தமாக அழிக்க வேண்டும் என்ற இலக்குடன் அங்கு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என இஸ்ரேலும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தியது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டாலும் 3ஆம் உலகப் போர் வெடிக்குமா என்ற கேள்வியை உருவாக்கியது.

Also Read

அக்டோபர் மாதமே டிரம்ப், ஜி ஜின்பிங் - விளாடிமிட் புடின் ஆகியோருடன் ஆயுத கட்டுப்பாடு குறித்து பேச தயார் எனத் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் denuclearisation மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதையும் தெரிவித்தார் டிரம்ப்.

இதைத்தொடர்ந்து இந்த மாதம் 18 - 19 ஆகிய இரு தினங்களில் நடக்க இருக்கும் APEC நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறும் மாபெரும் கூட்டம் சீனாவின் டெக் ஹப் ஆக இருக்கும் ஷென்சன் நகரில் நடக்க உள்ளது.

இக்கூட்டத்தில் டிரம்ப் கலந்துகொண்டு ஜி ஜின்பிங் - விளாடிமிட் புடின் ஆகியோரிடம் ஈரான் போர் மற்றும் அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

3 நாட்டின் தலைவர்கள் சந்திப்பு உறுதி செய்யப்பட்ட பின்பு, விளாடிமீர் புடின் இக்கூட்டத்தைப் பயன்படுத்தி நீண்ட காலமாக நடந்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

டிரம்ப் சிபிஎஸ்-க்கு அளித்த பேட்டியில் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் தொடர்பாகப் பேசு போது, அமைதி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருக்கும் வேளையில் விரைவில் இதற்கான தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+