அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எதிர்ப்பை மீறி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகிறது. ஆப்பிளின் மிகப்பெரிய ஒப்பந்த உற்பத்தியாளரான பாக்ஸ்கான், ஏற்கனவே சென்னையில் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து ஐபோன் மற்றும் இதர ஆப்பிள் தயாரிப்புகளை அசம்பிளி செய்து வரும் வேளையில், தனது தயாரிப்பை விரிவாக்கம் செய்ய கர்நாடகாவிற்கு தாவியுள்ளது.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் முக்கிய வர்த்தக பகுதியாக மாறிவரும் தேவனஹள்ளியில் பெரும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் ஆலை கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆப்பிள்-க்காக பாக்ஸ்கான் தேவனஹள்ளியில் சுமார் 2.56 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து ஆலை அமைத்து, டிசம்பர் மாதத்திற்குள் 100,000 ஐபோன்களை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது.

இந்த ஆலையில் பெரும்பாலும் பெண்கள் பணியாற்றுவார்கள் என கூறப்படும் வேளையில், ஆலை கட்டுமானத்தில் இருக்கும் போதே சென்னையில் கட்டப்பட்டது போல் தேவனஹள்ளியிலும் 30,000 பணியாளர்களுக்கான விடுதிகளும் வேகமாக கட்டப்பட்டு வருகின்றன.
இது இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்தித் திறனை பெரிய அளவில் விரிவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி டிரம்ப்-க்கும் ஆப்பிள் சிஇஓ டிம் குக்-கிற்கும் என்ன பிரச்சனை..?
ட்ரம்பின் எதிர்ப்பு மற்றும் ஆப்பிளின் முடிவு: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த வாரம் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் நடைபெற்ற சந்திப்பில் பேசிய போது, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம், "இந்தியாவில் உற்பத்தி செய்வதை நான் விரும்பவில்லை" என்று தெரிவித்தாக கூறினார்.
அமெரிக்காவிலேயே உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தினாலும், ஆப்பிள் நிறுவனம் இதை பொருட்படுத்தவில்லை. மாறாக, அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்று டிம் குக் உறுதியாக அறிவித்துள்ளார்.
இது, சீனாவை மட்டுமே சார்ந்திருக்கும் உற்பத்தி முறையிலிருந்து விலகி, இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆப்பிளின் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆப்பிள் சீனாவில் இருந்து தனது உற்பத்தி தளத்தை மாற்றுவதற்கு முக்கிய காரணம் டிரம்ப்-ன் முதல் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட நெருக்கடி தான்.
பாக்ஸ்கானின் இந்திய விரிவாக்கம்: தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் தனது முதல் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் துவங்கி தனது வெற்றி பாதையை உருவாக்கியது. தற்போது சென்னையில் பாக்ஸ்கானின் மொத்த எகோசிஸ்டமும் இருந்தாலும் அதிகப்படியான ஆர்டர்கள் வரும் காரணத்தாலும், அதை சீனாவில் தயாரிக்க முடியாத காரணத்தாலும் தற்போது சென்னையை தாண்டி பிற இடத்திலும் விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் பாக்ஸ்கான்-க்கு வந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே கர்நாடக மாநிலத்தில் உள்ள தேவனஹள்ளியில், பாக்ஸ்கான் நிறுவனம் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்டமான ஆலையை அமைத்துள்ளது. இது பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 34 கி.மீ தொலைவில், தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள தொட்டகொல்லஹள்ளி மற்றும் சப்பரதஹள்ளி கிராமங்களில் அமைந்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனம், தேவனஹள்ளி ஆலையில் 2.56 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. முதல் கட்டமாக 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2026-27 ஆம் ஆண்டில் இதே அளவு முதலீடு செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 100,000 ஐபோன்களை இத்தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் இலக்கு வைத்துள்ளது. இது, இந்தியாவை உலகளாவிய ஐபோன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு ஆப்பிள் எடுத்துள்ள முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பாக்ஸ்கான் தற்போது ஐபோன் மட்டும் அல்லாமல் ஐபாட், ஐபேட் ஆகியவற்றையும் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications