உக்ரைனின் முதுகில் குத்திய அமெரிக்கா..!! ரஷ்யாவுடன் டிரம்ப் போட்ட முக்கிய ஒப்பந்தம்..!!

உக்ரைன் - ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வந்த அமெரிக்கா திடீரென ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கு வருமானத்தை ஈட்டி தரும் ஒரு ஒப்பந்தம் என்பதால் உக்ரைன் அரசு அமெரிக்க அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க, ரஷ்யாவிடமிருந்து உடனடியாக டீசலை இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் முதுகில் குத்திய அமெரிக்கா..!! ரஷ்யாவுடன் டிரம்ப் போட்ட முக்கிய ஒப்பந்தம்..!!

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எரிபொருள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக, ஈரான் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடைப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் உயர்கின்றன. இதனை கட்டுப்படுத்தவும், அமெரிக்க நுகர்வோர், குறிப்பாக விவசாயிகள், பண்ணை உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு எரிபொருள் விலையை குறைக்கவும் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா உடனடியாக 3,00,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான டீசலை அமெரிக்காவிற்கும் உலகளாவிய சந்தைகளுக்கும் வழங்கும், நவம்பர் மாதத்தில் கூடுதலாக 5,00,000 மெட்ரிக் டன் டீசலும், அதனை தொடர்ந்து குறுகிய காலத்தில் மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டன் டீசலும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா மற்றும் உலக சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Also Read

ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் இருந்தாலும் ஏப்ரல் 7, 2027 வரை ரஷ்யா டீசலை விற்பனை செய்தல், விநியோகித்தல், இறக்குமதி செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பொருளாதார தடைகளால் நிதி நெருக்கடியில் தவிக்கும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய நிவாரணம். டீசல் விற்பனை மூலம் ரஷ்யாவுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும்.

இதற்கிடையே அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த ஒப்பந்தம் "முடிவுக்கு வர வேண்டிய போருக்கு செய்யப்படும் முதலீடு" என கூறியுள்ளார். டீசல் விற்பனையில் கிடைக்கும் பணத்தை ரஷ்யா , உக்ரைன் மிதான போருக்கு தான் பயன்படுத்த போகிறது என சாடியுள்ளார்.

Recommended For You

அமெரிக்கா ரஷ்யா மீது கடுமையான அழுத்தங்களை கொடுத்து, போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இடைக்கால தேர்தல் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது எரிபொருள் விலையை குறைப்பது போர் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் தான் குடியரசு கட்சி இடைக்கால தேர்தலில் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் டிரம்ப் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+