நான் கொலை செய்யப்பட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? துணை அதிபருக்கு ரகசிய கடிதம் எழுதி வைத்த டிரம்ப்!!

உலகிலேயே பொருளாதார ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் பலம் வாய்ந்த ஒரு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் பதவி என்பது பல்வேறு அதிகாரங்களையும் அதற்கேற்ப ஆபத்துகளையும் கொண்டது. எந்த சமயத்திலும் அதிபர் உயிருக்கு ஆபத்து உண்டு. இதனால் தான் அமெரிக்காவிற்கு விசா வேண்டி விண்ணப்பம் செய்தால் அத்தனை கேள்வி கேட்கப்படுகிறது. அதே போல அமெரிக்க அதிபர் ஒரு நாட்டிற்கு செல்கிறார், ஒரு நிகழ்வில் பங்கேற்கிறார் என்றாலே அந்த பகுதியே சல்லடை போட்டு தேடி பார்த்து பாதுகாப்பை உறுதி செய்வார்கள்.

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் ஊரை சுற்றி வம்பிழுத்து வைத்திருக்கிறார். ஒரு புறம் ஈரான் போர், ஏற்கனவே சீனாவுடன் வர்த்தக மோதல், வெனிசுலா மீது ராணுவ ந்டவடிக்கை என அவரது எதிரி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தகைய சூழலில் தான் டிரம்ப் சீனாவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருக்கிறார். அதாவது எதிரி நாட்டுக்கு சென்றிருக்கிறார்.

நான் கொலை செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? துணை அதிபருக்கு ரகசிய கடிதம் எழுதி வைத்த டிரம்ப்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த சீன பயணம் நடந்துள்ள சமயத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தான் வெளிநாடுகளுக்கு செல்லும் தனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அல்லது தாம் உயிரிழக்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு டிரம்ப் ஒரு ரகசியக் கடிதத்தை எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளை மாளிகையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி செபாஸ்டியன் கோர்க்கா இந்த தகவலை நியூயார்க் போஸ்டிற்கு வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் மேஜையில் (Resolute Desk) ஒரு ரகசியக் கடிதம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read

டிரம்ப் தனது வெளிநாட்டு பயணத்தின் போது தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிடுகிறது அல்லது கொலை முயற்சி நடக்கிறது என்றால், அடுத்தகட்டமாக அமெரிக்க அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான தெளிவான வழிமுறைகளை டிரம்ப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் "அதிகாரத்தின் மொழியை" (Language of Power) மட்டுமே புரிந்துகொள்ளும் என்றும், தமக்கு ஏதாவது நேர்ந்தாலும் அமெரிக்காவின் அதிகாரம் குறையாது என்பதை காட்டவே டிரம்ப் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவிலேயே டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே டிரம்ப் மற்றும் அமெரிக்க அரசின் சில பாதுகாப்பு நெறிமுறைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

டிரம்ப் சீன பயணத்தை குறித்து இந்த கடிதத்தை எழுதவில்லை பொதுவாகவே தன்னுடைய வெளிநாட்டு பயணங்களை குறிப்பிட்டு எழுதி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவராகத் தற்செயலான நிகழ்வுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. தமக்கு ஏதேனும் நேர்ந்தால் துணை அதிபர் வான்ஸ் உடனடியாகப் பொறுப்பேற்று நாட்டை வழிநடத்தத் தேவையான ரகசிய உத்தரவுகளை டிரம்ப் முன்கூட்டியே தயார் செய்து வைத்துள்ளாராம்.

முன்னதாக ஈரான் மீது போர் தொடங்குவதற்கு முன்பு டிரம்பே கூட எனக்கு ஏதேனும் நடந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக வழிகாட்டுதல்களாக நானே எழுதி வைத்திருக்கிறேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+