அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்றது முதலே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து எடுத்த வண்ணம் இருக்கிறார். அவருடைய பொருளாதாரக் கொள்கைகள் , வெளியுறவு கொள்கைகள் ,வர்த்தகக் கொள்கைகள், வரி கொள்கைகள் என ஒவ்வொன்றும் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக 2026ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ராணுவ நடவடிக்கைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முதலில் வெனிசுலா நாட்டின் மீது திடீரென ராணுவ நடவடிக்கை எடுத்தார். அடுத்ததாக கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக கூறினார். தற்போது ஈரான் மீது போர் தொடுத்து உலகையே ஸ்தம்பிக்க வைத்து விட்டடார். இதற்கிடையே உள்நாட்டிலும் தரமான சம்பவம் செய்து எதிர்க்கட்சியினரை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

டிரம்ப் 165 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 250ஆவது ஆண்டு கொண்டாடும் விதமாக புதிய டாலர் கரன்சியை வெளியிட இருக்கிறது. வழக்கமாக டாலர் கரன்சிகளில் கருவூல செயலாளர் மற்றும் கருவூல பொருளாளர் ஆகியோரின் கையெழுத்து தான் இடம் பெறும். ஆனால் புதிதாக வெளிவர இருக்கக்கூடிய டாலர் நோட்டுளில் டொனால்ட் டிரம்பின் கையெழுத்து இடம் பெற்று இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவூல செயலாளரின் கையெழுத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அதிபரான தன்னுடைய கையெழுத்து இடம்பெற வேண்டும் என டிரம்ப் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே கரன்சியில் அதிபரின் கையெழுத்து இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். அமெரிக்காவில் 1861 ஆம் ஆண்டு தான் டாலர் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து கருவூல பொருளாளர் மற்றும் செயலாளர் கையெழுத்துதான் அதில் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் முதல் முறையாக அதிபரின் கையெழுத்து அதில் இடம்பெறப்போகிறது. முதல் கட்டமாக 100 டாலர் கரன்சி நோட்டுகளில் டிரம்ப் கையெழுத்து இடம்பெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. படிப்படியாக மற்ற அனைத்து கரன்சிகளிலும் இந்த கையெழுத்து விரிவுபடுத்தப்படுமாம்.
இது தொடர்பாக அமெரிக்க கருவூர செயலாளர் ஸ்காட் பெசண்ட் அளித்த பேட்டியில் இந்த நடவடிக்கை நாடு சுதந்திரம் அடைந்து 250 ஆவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். டிரம்பின் ஆட்சியில் அமெரிக்கா நிதி வலிமை மற்றும் ஸ்திரத்தன்மை நோக்கிய பாதையில் பயணம் செய்கிறது , டிரம்பின் வரலாற்று சாதனைகளை அங்கீகரிக்க அவருடைய கையெழுத்து கொண்ட டாலர் கரன்சிகளை வெளியிடுவதுதான் அவருக்கு தரக்கூடிய சிறந்த கௌரவம் என கூறி இருக்கிறார்.
அந்த வகையில் டிரம்ப் கையெழுத்துடன் கூடிய அமெரிக்க டாலர்களை அச்சிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. விரைவில் அவை புழக்கத்திற்கும் வர இருக்கின்றன. ஏற்கனவே அரசு கட்டிடங்கள், நிறுவனங்கள் , அரசாங்க திட்டங்கள் , நாணயங்களில் எல்லாம் அதிபரின் பெயரை தான் வைக்க வேண்டும் என டிரம்ப வலியுறுத்தி வருகிறார் . அண்மையில் கூட ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு தங்க நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கரன்சி நோட்டுகளிலும் இனி டிரம்பின் கையெழுத்து இடம்பெறப் போகிறது. 165 ஆண்டுகால மரபினை டிரம்ப் மாற்றி அமைத்திருக்கிறார். உயிருடன் இருக்கக்கூடிய அதிபரின் உருவப்படம் கரன்சியில் அச்சிட தடை உள்ளது இதனால் தான் வெறும் கையெழுத்துடன் நிறுத்தி இருக்கிறார் ஒருவேளை இந்த சட்டத்தை மாற்றி தன்னுடைய உருவப்படத்தை கரன்சியில் அவர் பதிக்க முயல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications