ஐடி துறைக்கு பாதிப்பு: பெங்களூரு ரியல் எஸ்டேட் தலைகீழாக மாறப்போகுது.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்..!

பெங்களூரு: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் எடுத்திருக்கும் போட்டி வரி நடவடிக்கை இந்தியாவின் ஐடி துறையையும் பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையையும் கடுமையாக பாதிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என ஏப்ரல் 2ஆம் தேதி அறிவித்துள்ளார். இந்த போட்டி வரி நடவடிக்கை இந்தியாவில் பல்வேறு துறைகளையும் பாதித்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐடி துறைக்கு பாதிப்பு: பெங்களூரு ரியல் எஸ்டேட் தலைகீழாக மாறப்போகுது..ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்..!

அந்த வகையில் டிரம்பின் இந்த போட்டி வரி நடவடிக்கை இந்திய ஐடி துறையை கடுமையாக பாதித்திருக்கிறது. பங்குச் சந்தைகளில் கூட ஐடி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் பெரிய அளவில் சரிவை கண்டிருக்கின்றன. அடுத்த சில மாதங்களுக்கு ஐடி நிறுவன பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பங்குச்சந்தை சார்ந்த ஆலோசகர்கள் யோசனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த போட்டி வரி விதிப்பு நடவடிக்கை இந்தியாவை சேர்ந்த பல்வேறு துறைகளையும் பாதிக்கும் என நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ரீதியிலான நடவடிக்கை அமெரிக்க பொருளாதார மந்த நிலைக்கு வித்திடும் என சொல்லப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும்போது இந்தியாவில் ஐடி துறை பாதிக்கும் என கூறப்படுகிறது.

ஐடி துறைக்கு பாதிப்பு: பெங்களூரு ரியல் எஸ்டேட் தலைகீழாக மாறப்போகுது..ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்..!

இந்தியாவில் மேக்ரோ பொருளாதாரம் மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்பு , ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்திருக்கும் நகரங்களில் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய ஐடி சேவைகளை இந்திய நிறுவனங்களிடம் இருந்துதான் பெறுகின்றன.

இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஐடி நிறுவனங்களின் வருமானம் அமெரிக்க நிறுவனங்களைத் தான் சார்ந்து இருக்கிறது. அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் போது அமெரிக்க நிறுவனங்கள் ஐடி சேவைக்காக தாங்கள் செய்யும் செலவினங்களை குறைக்கும். அவ்வாறு குறையும் போது இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களுக்கு கிடைக்கும் ப்ராஜக்ட்டுகளின் எண்ணிக்கை குறையும் இது இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாயை குறைக்கும்.

ஐடி துறைக்கு பாதிப்பு: பெங்களூரு ரியல் எஸ்டேட் தலைகீழாக மாறப்போகுது..ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்..!

இவ்வாறு ஐடி நிறுவனங்களின் வருவாய் குறையும் போது அவை ஊழியர் பணி நீக்க நடவடிக்கை உள்ளிட்டவற்றை கையில் எடுக்க வாய்ப்புண்டு. அப்படி ஐடி நிறுவனங்கள் ஊழியர் பணி நீக்க நடவடிக்கை எடுத்தாலும் , வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைத்தாலும் பெங்களூரு , புனே உள்ளிட்ட ஐடி துறைகளை சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நகரங்கள் பெரிய பாதிப்பை சந்திக்கும் என சொல்லப்படுகிறது.

பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் மார்க்கெட் ஐடி துறையை சார்ந்திருக்கிறது என கூறும் நிதி ஆலோசகர் பராஸ் கங்க்வால் ஐடி துறை கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக வேகமாக வளர்ச்சி அடைந்து வந்ததால் இந்த நகரங்களில் எல்லாம் ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. ஆனால் அமெரிக்க பொருளாதார மந்த நிலை இந்த நகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக அளவு ரியல் எஸ்டேட் வளர்ந்து வரும் ஒரு நகரமாக பெங்களூரு இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் அங்கே அதிக எண்ணிக்கையில் செயல்படுவதுதான். பெங்களூருவில் ஐடி துறை சார்ந்து இயங்கக்கூடிய பொருளாதார நடவடிக்கைகள் அதிகம். ஐடி நிறுவனங்களுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்காவர்கள் பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களுக்கு வருகை தருகின்றனர். இவர்களுக்கு தங்கும் இடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை தேவை.

எனவே இந்த நகரங்கள் ஐடி துறை சார்ந்த பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை சார்ந்துள்ளன. பெங்களூருவில் ஐடி நிறுவனங்களில் வேலை செய்வதற்காக வருகை தரும் இளைஞர்கள் தங்குவதற்காக தங்கும் விடுதிகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன . அது மட்டும் இன்றி பல்வேறு நபர்களும் தங்களுடைய வீடுகளை இதுபோல வேலை செய்பவர்களுக்கு வாடகைக்கு விடுத்து பல மடங்கு லாபம் பார்க்கின்றனர். எனவே ஐடி துறைகளில் நிகழக்கூடிய எந்த ஒரு மாற்றமும் பெங்களூரு , புனே நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஐடி துறை வேகமாக வளர்ச்சி அடைகிறது, ஐடி துறையில் பணி வாய்ப்புகள் அதிகரிக்கின்றன எனும் போது இந்த நகரங்களில் எல்லாம் ரியல் எஸ்டேட் தேவை அதிகரித்து அதன் மதிப்பு உயரும். அதேவேளையில் ஐடி துறை மந்தமடைகிறது ,ஊழியர்கள் பணி நீக்கம் நடைபெறுகிறது எனும்போது இந்த நகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தை வேகமான சரிவை சந்திக்கும். அந்த வகையில் ஏற்கனவே பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வண்ணம் இருக்கின்றன.

2024 ஆம் ஆண்டில் மட்டும் பெங்களூருவில் சுமார் 50,000 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அங்கே வாடகை வீடுகளுக்கான தேவை குறைந்து விட்டதாகவும் பல்வேறு வீட்டு உரிமையாளர்களும் தங்களுடைய வீடுகளுக்கு வாடகைக்கு ஆட்கள் கிடைக்காமல் காலியாகவே வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமெரிக்க பொருளாதார சூழல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணமாக இன்னும் பெங்களூரு , புனே ஆகிய நகரங்களில் ஐடி துறை சார்ந்த வேலை வாய்ப்பு சரிவை சந்திக்கும். இது மேலும் மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை குறிப்பாக வீடு சம்பந்தப்பட்ட பிரிவு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. வீடுகளின் விற்பனை 23 சதவீத சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல புதிதாக வீடுகள் கட்டி விநியோகம் செய்யப்படுவது 34 சதவீதம் குறைந்து இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் 9 முன்னணி நகரங்களில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1,05,791 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1, 36, 702 என இருந்தது. அதிகபட்சமாக ஹைதராபாத்தில் வீடுகள் விற்பனை 47 சதவீதமும் மும்பையில் 36 சதவீதமும் சரிவடைந்து இருக்கிறது. சென்னையில் 2 சதவீதம் என வீடுகள் விற்பனை குறைந்து இருக்கிறது புனேவில் இது 33 சதவீதமாக இருக்கிறது. பெங்களூருவில் மட்டும் வீடுகளின் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டில் இது குறையும் என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+