சென்னை: அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை இந்தியாவை சேர்ந்த பல்வேறு துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது .
இதில் அதிக அளவு பாதிப்பை சந்தித்து இருப்பது தமிழ்நாட்டை சேர்ந்த தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் தான். அமெரிக்கா அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகளில் பணியாற்றும் 75 ஆயிரம் பேரின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக அளவில் தோல் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய தோல் பொருட்களில் 30 சதவீதம் அமெரிக்க சந்தையை நோக்கி தான் செல்கிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் 60% பொருட்களை அமெரிக்க சந்தையை இலக்காக வைத்து தான் உற்பத்தியையே மேற்கொள்கின்றன. அவற்றின் விற்பனையே அமெரிக்க சந்தையை சார்ந்து தான் இருக்கிறது .
அமெரிக்க அரசின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது என கேஎச் ஷூஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அப்துல் வஹாப் தெரிவித்திருக்கிறார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டி அளித்துள்ள அவர் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சுமார் 20 சதவீதம் தள்ளுபடியில் பொருட்களை கேட்பதாகவும் கூடுதல் வரியால் ஏற்படக்கூடிய நிதிச் சுமையை ஏற்றுமதியாளர்களான எங்களை ஏற்க சொல்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு பிராண்டுகளும் புதிதாக எந்த ஆர்டரையும் தராமல் நிறுத்தி வைத்திருக்கின்றன என்றும் கூறுகிறார். இதனால் மூலப்பொருட்களை வாங்கி வைத்துவிட்டு நாங்கள் புதிய ஆர்டர்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டாகி விட்டது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சூழல்களில் தேசிய நலனை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம் அதே வேளையில் இந்த வரி விதிப்பு பிரச்சனையிலிருந்து மீண்டு வர அரசு எங்களுக்கு நிதி ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என வஹாப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஃபரிதா பிரைம் டானரி நிறுவனத்தின் இஸ்ரார் அகமது அளித்த பேட்டியில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை விடுத்து வேறு நாடுகளின் உற்பத்தியாளர்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக நாங்கள் வேறு வழியில்லாமல் தள்ளுபடி விலையில் பொருட்களை அனுப்பி வருகிறோம் என கூறுகிறார். இதே நிலை நீடித்தால் எங்களின் தொழில்களே முற்றிலுமாக முடங்கும் சூழல் உண்டாகும் என குறிப்பிடுகிறார்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications