இந்திய பொருட்கள் மீது 26% வரி விதித்த டிரம்ப்.. ப்ரோகரேஜ் நிறுவனங்களின் ஷாக் கணிப்பு..!

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வரி விதிப்பு நடவடிக்கையால் உலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறார். உலக நாடுகள் பலவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கின்றன, ஆனால் அமெரிக்கா அந்த நாடுகளின் பொருட்களுக்கு குறைந்த வரி தான் விதிக்கிறது என டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

இது நியாயமான வர்த்தக நடைமுறை இல்லை எனவே அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் இறக்குமதி வரியை இந்தியா உள்ளிட்ட நாடுகள் குறைக்க வேண்டும் இல்லை என்றால் போட்டி வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். ஏப்ரல் 2ஆம் தேதி அன்று இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்திய பொருட்கள் மீது 26% வரி விதித்த டிரம்ப்.. ப்ரோகரேஜ் நிறுவனங்களின் ஷாக் கணிப்பு..!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் 26 சதவீதம் இறக்குமதி வரியை விதித்திருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச தரகு நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் கூறுகின்றன.

பல்வேறு நாடுகளிலும் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு போட்டி வரியை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் டிரம்ப். இதன்படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன. நிஃப்டி, சென்சஸ் உள்ளிட்டவற்றின் புள்ளிகள் குறைந்தே வர்த்தகமாகின.

ஐடி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் குறைந்துள்ளன. இந்த சூழலில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு விதித்திருக்கும் இந்த இறக்குமதி வரி இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் நிர்வாகத்தை பொருத்தவரை தங்களுடைய வரி விதிப்பில் இருந்து மருந்து துறைக்கு மட்டும் விலக்கு தந்துள்ளது. இதனால் இந்தியாவை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.

இதன் காரணமாக வியாழக்கிழமை அன்று பங்குச்சந்தையில் இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இருந்தாலும் மற்ற துறைகள் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட இருக்கின்றன. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 14 சதவீத பொருட்கள் மருந்து சம்பந்தப்பட்டவை தான்.

இந்திய பொருட்கள் மீது 26% வரி விதித்த டிரம்ப்.. ப்ரோகரேஜ் நிறுவனங்களின் ஷாக் கணிப்பு..!

இந்த நிலையில் மருந்து பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் இந்த போட்டி வரியில் இருந்து விலக்கு தந்திருப்பது தற்போதைக்கு மருந்து நிறுவனங்களுக்கு நிவாரணமாக தெரிந்தாலும், டிரம்ப் நிர்வாகம் எப்பொழுது வேண்டுமானாலும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

சர்வதேச தரகு நிறுவ நிறுவனமான ஜெஃபரீஸ் எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய போட்டி வரி பட்டியலில் மருந்து பொருட்களை டிரம்ப் நிர்வாகம் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவை சேர்ந்த கிளென் பார்மா தன்னுடைய வருமானத்தில் 54 சதவீதத்தை அமெரிக்காவிற்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதன் மூலமே ஈட்டுகிறது . பயோகான் நிறுவனத்தின் 50 சதவீத வருமானம் அமெரிக்க ஏற்றுமதியை நம்பித்தான் இருக்கிறது. அதேபோல சைன் ஜின் நிறுவனத்தின் வருமானத்தில் 68 சதவீதம் அமெரிக்க ஏற்றுமதியை நம்பித்தான் இருக்கிறது.

தற்போதைக்கு இந்த பெரிய நிறுவனங்கள் எல்லாம் டிரம்பின் எதிர்பாராத அறிவிப்பால் மகிழ்ச்சியில் இருக்கின்றன. இதன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு மருந்து நிறுவனங்களின் பங்குகள் உயர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. வரி விதிப்பில் இருந்து மருந்து நிறுவனங்கள் தப்பி இருந்தாலும் இந்திய ஏற்றுமதியையே டிரம்ப் நிர்வாகத்தின் போட்டிவரி அறிவிப்பால் பாதிக்கப்படும் என ஜெஃப்ரிஸ் நிறுவனம் கூறுகிறது.

மெக்குவாரி நிதி நிறுவனம் போட்டி வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போக்கையே பாதிக்கும் என தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களில் 3 சதவீதம் வாகன துறையை சேர்ந்தது . டிரம்ப் நிர்வாகம் 26 சதவீத இறக்குமதி வரி விதித்திருப்பதால் இந்தியாவில் வாகன பாகங்களை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள் பெரிய பாதிப்பை சந்திக்கும் என தெரிவித்துள்ளது.

இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என மெக்குவாரி கூறியுள்ளது. யுபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில் எதிர்பார்த்ததை விட அதிகபட்ச வரியை டிரம்ப் நிர்வாகம் விதித்திருக்கிறது என்றும் இதனால் இந்திய ஏற்றுமதி துறை பாதிக்கும் என்றும் குறிப்பிடுகிறது. தற்போதைக்கு மருந்து துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை இந்த போட்டி வரிக்குள் கொண்டு வரும் என எச்சரித்துள்ளது.

பெர்ன்ஸைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காரணமாக பல்வேறு நாடுகளும் டிரம்ப் அரசை சமாதானப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கும் என்றும் இதன் காரணமாக அந்த நாடுகள் தங்கள் நாட்டில் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்காலிகமானது தான் என்றும் அவர்களுக்கு சாதகமான விஷயங்கள் நடைபெறும் போது டிரம்ப் நிர்வாகம் இந்த வரியை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறைவுதான் என்பதால் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை வாங்குவதற்கு சீனாவை தவிர்த்து விட்டு இந்தியாவை நோக்கி வருவதற்கான வாய்ப்புள்ளதாக பெர்ன்ஸ்டைன் தெரிவித்துள்ளது. இதனை மத்திய அரசு சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் அரசின் வரி விதிப்பு நடவடிக்கை இந்திய ஐடி சேவையின் நிறுவனங்களை பெருமளவில் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே மத்திய அரசு அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு வார்த்தையை நடத்த இருக்கிறது. இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து ஏதேனும் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் அரசை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து பல பொருட்களும் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதால் அமெரிக்காவை சேர்ந்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கருதுகிறது. இதனால் இறக்குமதி வரியை உயர்த்தினால் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை நிறுவனங்கள் வாங்கும் என்றும் அதன் மூலம் அமெரிக்காவில் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்றும் நம்புகிறது.

அமெரிக்காவில் ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. விரைவில் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் என சொல்லப்படும் நிலையில் தான் டிரம்ப் அரசு சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+