அமெரிக்காவில் பணியாற்ற விருப்பம் இல்லாத இந்திய ஐடி ஊழியர்கள் இருப்பார்களா? என்றால் அது கொஞ்சம் குறைவு தான். ஏனெனில் அதிக சம்பளம், சொகுசான வாழ்க்கை எப்படி பலவற்றையும் நினைத்து தான், நம்மவர்கள் கனவு கோட்டையை கட்டு வருகின்றனர்.
ஆனால் இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடுவது போல, கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஹெச்1பி விசா மற்றும் இன்னும் விசாக்களுக்கு தடை விதித்தார்.
மேலும் இந்த வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் மாற்றக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்தியர்களுக்கு கெட்ட செய்தி
அமெரிக்க அதிபரின் இந்த அதிரடி நடவடிக்கையானது அமெரிக்கர்களுக்கு வாய்ப்பினைக் கொடுத்தாலும், இந்தியர்களுக்கு இது கெட்ட செய்தியாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த விசாவினால் அதிகம் பாதிக்கப்பட போவது இந்தியர்கள் தான். ஏனெனில் ஹெச் 1பி விசா மூலம் அதிகம் அமெரிக்கா செல்பவர்களில் இந்தியர்கள் தான் அதிகம்.
மீண்டும் பணிக்கு அனுமதிக்கலாம்
ஆனால் தற்போது இந்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. அதாவது டிரம்பின் ஆர்டருக்கு எதிரான சில வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கு மைக்ரோசாப்ட் மற்றும் எக்ஸான் மொபைல் நிறுவனங்களுக்கு மீண்டும் தற்காலிக பணியாளர்களை அமெரிக்காவிற்கு கொண்டு வர அனுமதிக்கும்.
கடுமையான விதிகள்
இந்த வழக்கானது மேல் முறையீட்டு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டிரம்ப்பின் கடுமையான விதிகளுக்கு ஆதரவாக செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வெளி நாட்டு தொழிலாளர்களை அழைத்து வர நினைக்கும் நிறுவனங்களுக்கு விதிகளை கடுமையாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெளி நாடுகளுக்கு கை மாறலாம்
ஆனால் இந்த குழப்பங்கள் அனைத்தும் வீணாகலாம். வெளி நாட்டிலிருந்து வரும் ஊழியர்களுக்கு பதில் அமெரிக்கர்களை பணியில் அமர்த்தலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் இது குறித்து நிபுணர்களோ, இப்படி கட்டுப்பாடுகள் அதிகமாகும் போது அமெரிக்கா நிறுவனங்கள் இன்னும் அதிகமான வேலைகளை வெளி நாடுகளுக்கு மாற்றுவதற்கான எதிர்பாராத விளைவை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர்.
கடுமையான கட்டுப்பாடுகள்
ஏனெனில் ஏற்கனவே இந்திய அவுட்சோர்சிங் நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் பணி புரிந்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்நாட்டு மற்றும் பல நாடுகளின் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உலகளாவிய போட்டியின் உயர் நிலை அமெரிக்காவிற்கு அதன் தொழில் நுட்ப விளிம்பை அளிக்கிறது என்று 9,500 மேல் பணியாற்றும் இந்திய நிறுவனமான ஜென்சார் டெக்னாலஜியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் கிஷோர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு செல்லலாம்
தற்போது இந்த நிறுவனத்தின் 400 மேற்பட்டோர் விசாவின் மூலம் பணியாற்றி வருகின்றனர். ஆக நிறுவனங்கள் தாங்கள் விரும்பும் ஊழியர்களை பணிக்கு அமர்த்த முடியாவிட்டால், அவர்கள் இந்தியாவினை நோக்கி படையெடுத்து செல்ல முடியும். அமெரிக்கா விட்டுக் கொடுக்காவிட்டால், நிறுவனங்களுக்கு தேவையான திறமையான பணியாளர்களை அமெரிக்காவிற்குள் கொண்டு வராவிட்டால், நாங்கள் எங்கள் அலுவலகங்களை வெளி நாடுகளில் வைப்போம் என்று கூறியுள்ளார்.
விசா தடை பாதிப்பில்லை
ஜூன் மாதத்தில் ஹெச் 1பி விசாவினை தடை செய்தது வெளிநாட்டு உழியர்களை பாதிக்கவில்லை. மாறாக நாட்டுக்கு வெளியே உள்ளவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தியது. எனினும் டிரம்பின் நடவடிக்கையினால் இந்திய அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் நீண்டகாலமாக அமெரிக்காவில் பணியமர்த்துவதற்கான திட்டங்களை வலியுறுத்தி வருகின்றன. கடந்த மாதம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 பேரை பணிக்கு அமர்த்தபோவதாக அறிவித்தது.
அமெரிக்காவுக்கு தான் பாதிப்பு
எனினும் டிரம்பின் இந்த அதிரடியான முடிவினால், நிச்சயம் நிறுவனங்கள் வெளி நாடுகளை நாடி செல்லலாம். இதனால் மற்ற நாடுகளில் பணி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு குறைவான செலவில் திறமை வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கும் போது, நீங்கள் உங்கள் வணிகத்தினை 24 மணி நேரமும் செய்யலாமே என்கிறது இடி அறிக்கை. உண்மையில் இது அமெரிக்காவுக்கு ஒரு வகையில் நஷ்டமே..
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications