திருப்பூர் மக்களுக்கு டிரம்ப் சொன்ன குட் நியூஸ்..!! விரைவில் இந்தியா –அமெரிக்கா டிரேட் டீல்..!!

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முதல் கட்ட ஒப்பந்தமும் பின்னர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாக வேண்டும். அந்த வகையில் முதல் கட்ட ஒப்பந்தம் குறித்த ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அமெரிக்கா மிக அருகில் வந்துவிட்டதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது டிரம்ப் இந்த முக்கிய தகவலை வெளியிட்டார். "அவர்கள் (இந்தியா) ஒரு ஒப்பந்தத்தை செய்ய விரும்புகிறார்கள். நாங்களும் ஒரு ஒப்பந்தத்தை செய்ய போகிறோம். நாங்கள் அதற்கு மிகவும் அருகில் இருக்கிறோம் " என திட்டவட்டமாக கூறினார்.

திருப்பூர் மக்களுக்கு டிரம்ப் சொன்ன குட் நியூஸ்..!! விரைவில் இந்தியா –அமெரிக்கா டிரேட் டீல்..!!

இது நாம் முன்பு செய்துகொண்ட ஒப்பந்தங்களை விட முற்றிலும் மாறுபட்ட வகையான ஒப்பந்தமாக இருக்க போகிறது என டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், முந்தைய ஒப்பந்தங்களுக்கும் இந்த புதிய ஒப்பந்தத்திற்கும் என்ன மாதிரியான வித்தியாசங்கள் இருக்கும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

Also Read

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த முக்கிய அறிவிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோவின் இந்தியா பயணத்திற்குப் பிறகு வெளியாகியுள்ளது. மார்க்கோ ரூபியோ நேற்று இந்தியா வந்தார், அவர் மும்பையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சில விவகாரங்கள் மட்டுமே தற்போது தீர்க்கப்பட வேண்டி இருப்பதாகவும் மார்க்கோ ரூபியோ சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பாசிடிவான தகவல்கள் வெளியாகி இருப்பது நல்ல விஷயம்.

Recommended For You

இந்தியாவில் இருந்து ஜவுளி, கடல் சார் உணவு பொருட்கள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்து தான் செல்கின்றன. குறிப்பாக திருப்பூர் ஜவுளி உற்பத்தியின் பெரும்பகுதி அமெரிக்க சந்தையை சார்ந்து தான் இருக்கிறது. எனவே இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு எல்லாம் வரி சலுகை கிடைத்தால் திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு லாபமாக இருக்கும். விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையேயான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்பது தான் ஆயிரக்கணக்கான ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+