அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் ஆலைகளை கட்டுவதையும், இந்தியாவில் ஊழியர்களை பணியமர்த்தி வருவதையும் கண்டித்து, தனது பதவிக்காலத்தில் இத்தகைய நடைமுறைகளுக்கு முடிவு கட்டப்படும் என எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் வளர்ச்சிக்கும், ஆதிக்கத்திற்கும் முக்கியதுவம் கொடுக்கும் அதேவேளையில், அவருடைய செயல்பாடுகள் மற்ற நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.

அமெரிக்க நிறுவனங்கள் காலம் காலமாக சீனாவில் தொழிற்சாலையும், இந்தியா டெக் வல்லுனர்களை நம்பியே தனது சாம்ராஜ்ஜியங்களை மேம்படுத்தி வந்த நிலையில், டிரம்ப்-ன் இத்தகைய முடிவுகள் இந்தியா, சீனாவுக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்காவுக்கே கடுமையாக பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (AI) மாநாட்டில் புதன்கிழமை டிரம்ப் கலந்துக்கொண்டார், இக்கூட்டத்தில் AI தொடர்பாக மூன்று நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதில் முக்கியமான ஒரு உத்தரவு, அமெரிக்க வெள்ளை மாளிகை AI-ஐ பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான திட்டமும் உள்ளது.
இதை தொடர்ந்து AI Summit-ல் பேசிய டிரம்ப் நீண்ட காலமாக அமெரிக்க டெக் நிறுவனங்கள் உலகமயமாக்கலை தீவிரமாக பின்பற்றியது மூலம் பல கோடி அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை இழக்க செய்து துரோகம் செய்துள்ளதகா குற்றம்சாட்டினார் டிரம்ப்.
இதை தொடர்ந்து பேசி அவர் அமெரிக்காவிந் பெரிய டெக் நிறுவனங்கள், அமெரிக்காவின் சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொண்டு சீனாவில் ஆலைகளை கட்டியும், இந்தியாவில் ஊழியர்களை பணியமர்த்தி, ஐர்லாந்தில் லாபத்தை குறைத்தும் வருகின்றன.
இதேநேரத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சொந்த நாட்டு மக்களை புறக்கணித்து, சில சமயம் அவர்களை பணி அமர்த்துவதில் தடையும் விதிக்கும் நிலை உள்ளது. ஆனால் என்னுடைய ஆட்சியில் இனி இதுப்போன்று நடக்க கூடாது. அமெரிக்க நிறுவனங்களின் மோசமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். டிரம்ப்-ன் பேச்சு, உலகளாவிய டெக் துறையை கடுமையாக பாதிக்கும் விதமாக உள்ளது.
இதை தொடர்ந்து AI துறை குறித்தும் ஏஐ துறை வளர்ச்சி குறித்தும் டிரம்ப் பேசுகையில் உலகளாவிய ஏஐ போட்டியில் வெற்றிப்பெற சிலிகான் வேலி மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் புதிய தேசிய உணர்வு மற்றும் நாட்டுப்பற்று தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.
அமெரிக்க டெக் நிறுவனங்கள் இனி முழுவதுமாக அமெரிக்காவிற்கான நிறுவனமாக இருக்க வேண்டும். அனைத்திலும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பரதானமாக வைக்க வேண்டும். அது தான் நாங்கள் கேட்கும் ஒரே விஷயம் என்று டிரம்ப் அமெரிக்க நிறுவனங்களுக்கு கண்டிப்பான முறையில் கோரிக்கை வைத்தார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் டெக் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப்-ன் இந்த பேச்சு பல அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும், உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் டாப் ஏஐ நிறுவனங்கள் அனைத்திலும் சீனர்களும், இந்தியர்களும் தான் முக்கிய பதவியில் உள்ளனர்.
இதேபோல் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்களின் வேகமான வளர்ச்சிக்கும், தொடர்ந்து லாபம் ஈட்டுவதற்கும் இந்திய டெக் ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் டிரம்ப்-ன் எச்சரிக்கை அமெரிக்க நிறுவனங்களுக்கு தூக்கி வாரிப்போடும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் இனி சீனாவில் தொழில்சாலை அமைப்பதிலும், இந்தியாவில் டெக் ஊழியர்களை நியமிப்பத்திலும் தயக்கம் காட்டுமா என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

மீண்டும் மீண்டுமா..? டெக் நிறுவனங்களை கேள்வி கேட்க ஆளே இல்லையா? அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சி

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications