பொதுவாகவே அரசியல்வாதிகள், அதிபர் வேட்பாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் ஆகியோர் வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் தான் செல்வார்கள். இருந்தாலும் அவற்றை மீறி சில நேரங்களில் சில சம்பவங்கள் நிகழ்ந்துவிடும். அதற்கு உதாரணமாய் தற்போது ட்ரம்பை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த போது சுட்டுக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. தேர்தல் சமயத்தில் ஒரு அதிபர் வேட்பாளருக்கு இறப்பு நேரிட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
அமெரிக்காவில் இன்னும் சில நாட்களில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பிரச்சார பேரணியில் இருந்தபோது துப்பாக்கி சூடு மூலம் அவரை கொலை முயற்சி நடந்துள்ளது. அதன் பிறகு ட்ரம்ப் அவசரமாக மேடையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் பென்சில்வேனியாவில் ட்ரம்ப் பிரச்சாரம் செய்தபோது நிகழ்ந்துள்ளது. மேலும் டிரம்ப்பிற்கு வலது காதில் இதனால் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ட்ரம்ப் நலமுடன் இருப்பதாக அவரது குழுவினர் உறுதி அளித்தாலும், இந்த சம்பவம் அமெரிக்க அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிரம்பை சுட்டதாகக் கூறப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதிபர் வேட்பாளர் ஒருவர் தாக்கப்படுவது இதுவே முதல் முறையா?: 1912-ஆம் ஆண்டில், டெடி ரூஸ்வெல்ட் ஒரு பிரச்சார உரையின் போது சுடப்பட்டார். ஆனால் உயிர் பிழைத்தார். 1968-ஆம் ஆண்டில், ராபர்ட் எஃப். கென்னடி தனது அதிபர் பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். டிரம்ப் உட்பட பல அதிபர்கள் படுகொலை முயற்சிகளை இதற்கு முன்னர் எதிர்கொண்டுள்ளனர்.
அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு முன் கொல்லப்பட்டால் என்ன நடக்கும்?: ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின் கூற்றுப்படி, ஒரு அதிபர் வேட்பாளர் இறந்துவிட்டாலோ அல்லது பதவிக்கு வருவதற்கு முன்பு பாதிக்கப்பட்டாலோ பின்பற்றப்படும் செயல்முறை வேட்பாளர் இறந்த நேரம் மற்றும் அவரின் இயலாமையைப் பொறுத்தது.
உதாரணமாக ஒரு அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு முன்பு இறந்துவிட்டால் வேறு செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல ஒரு அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கு பின்னர் இறந்து விட்டால் அதற்கு வேறு செயல்முறை பின்பற்றப்படுகிறது.
பொதுத் தேர்தலுக்கு முன் ஒரு வேட்பாளர் இறந்தாலோ அல்லது கை கால் செயலிழந்தாலோ, அரசியல் கட்சி வேறு ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். இது பொதுவாக கட்சியின் தேசிய குழு உறுப்பினர்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் தேர்வு செயல்முறைக்கு ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் முறைகள் இருக்கும்.
ஒரு அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் இறந்து விட்டால் பதவி ஏற்பதற்கு முன்பு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யாரோ.. அவர் அதிபர் ஆகிவிடுவார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications