அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் அமெரிக்கா மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக் கூட்டணியில் மிக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக செர்ஜியோ கோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வில் பேசிய டொனால்ட் டிரம்ப், இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகவும் நேர்மையான ஒப்பந்தமாக இருக்கும் என்று உறுதியளித்தார். மேலும், இது இதற்கு முன்னர் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் இந்தியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கி வருகிறோம். இது முந்தைய காலங்களில் இருந்த ஒப்பந்தங்களை விட மிகவும் வித்தியாசமானது மற்றும் சிறப்பானது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மிக முக்கியமான உறவு : அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தியாவுடனான உறவு என்பது நம் நாட்டின் மிகவும் முக்கியமான சர்வதேச உறவுகளில் ஒன்று என்று டிரம்ப் வலியுறுத்தினார். இந்தப் புதிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில், புதிதாகப் பொறுப்பேற்கும் தூதர் செர்ஜியோ கோரின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இது ஒரு பெரிய விஷயம் என்று அழுத்தமாகக் கூறிய டிரம்ப், விரைவில் தாம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதை மீண்டும் சூசகமாக தெரிவித்தார்.
அதேபோல், இந்தியாவின் வியூக முக்கியத்துவம் மற்றும் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை பாராட்டிய அவர், இந்தியா, உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றிற்கு தாயகமாக இருப்பதுடன், மிக வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்கிருந்த தனிப்பட்ட நல்லுறவை பற்றி கூறிய அவர், பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு உள்ளது. அதை செர்ஜியோ, அவருடன் நட்பு பாராட்டுவதன் மூலம் மேலும் பலப்படுத்தி இருக்கிறார்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய்க்கான வரி குறையும் : இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா விதித்த வர்த்தகத் தடைகள் குறித்துப் பேசியபோது, அந்த வரிகளைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். ரஷ்ய எண்ணெயை வாங்குவதால், இந்தியா மீது இப்போது அதிக வரிகள் உள்ளன. ஆனால், அவர்கள் இப்போது ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்வதை வெகுவாக குறைத்துள்ளனர். எனவே, நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். ஒரு காலகட்டத்தில், நாங்கள் அவற்றைக் குறைத்துவிடுவோம்" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 50% வரை வரிகளை அமெரிக்கா விதித்திருந்தது. இந்தப் பிரச்சனை குறித்துப் பேசிய டிரம்ப், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறையும் என்று பிரதமர் மோடி தனக்கு உறுதியளித்ததாக கூறினார். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அல்லது பிற அரசுத் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications