அமெரிக்க அரசு கடந்த வாரம் வெனிசுலா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக வெனிசுலா நாட்டு அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இந்த திடீர் ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் டிரம்பின் அடுத்த இலக்கு ஈரானாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஈரான் நாட்டில் ஏற்கனவே அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதாரம் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் ஆட்சியில் இருந்து சுதந்திரம் கோரும் ஈரான் மக்களுக்கு உதவ அமெரிக்க தயாராக இருக்கிறது என வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார் டிரம்ப்.

தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் மக்களுக்கு சுதந்திரம் தேவை, முன்பை விட தற்போது அவர்களுக்கு அதிக சுதந்திரம் தேவைப்படுகிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர் சுதந்திரம் வேண்டும் என கோரு மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் . அவருடைய இந்த பதிவு வெனிசுலாவை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரானாக இருக்குமோ என்ற விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
ஏற்கனவே ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில் தான் டிரம்ப் திடீரென ஈரான் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட தயாராக இருக்கிறது என கூறி இருக்கிறது.
தி நியூயார்க் போஸ்ட்டில் ஈரானின் ராணுவ நிலைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்க ராணுவம் ஆலோசனை நடத்தி வருவதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் , தற்போது வரை ராணுவ வீரர்கள் அல்லது போர் விமானங்களும் அந்த பிராந்தியத்தை நோக்கி அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக டிரம்ப், ஈரான் அரசு போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்தினால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரித்து இருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் ஈரான் மக்களின் தைரியத்திற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என தெரிவித்திருந்தார்.
ஈரானில் தொடர்ச்சியாக மக்கள் இரண்டாவது வாரமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் மக்களின் போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது. 78 போராட்டக்காரர்கள் வரை உயிரிழந்திருப்பதாகவும் 2600 பேர் வரை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஈரான் அரசு, அமெரிக்கா தான் ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்களை தூண்டி போராட்டம் நடத்த வைக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. அரசுக்கு எதிராக போராடுபவர்கள் கடவுளின் எதிரிகளாக கருதப்படுவார்கள் என ஈரான் அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது அப்படி என்றால் அவர்களுக்கு மரண தண்டனை கூட கிடைக்கலாம் என கூறி இருக்கிறது.
More From GoodReturns

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?



Click it and Unblock the Notifications