முடிந்தது ஈரான் போர்..!! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புது கண்டிஷன் போட்ட டிரம்ப்..!!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் மத்திய கிழக்கில் போர் உண்டானது. இந்த போரை தொடர்ந்து ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது.

கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு அதன் விலை உயர்ந்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன. எல்பிஜி விநியோகம் தடைப்பட்டு அதன் விலையும் அதிகரித்து சாமானிய மக்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோடிக்கணக்கான மக்களுக்கு நற்செய்தியாக ஈரான் போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

முடிந்தது ஈரான் போர்..!! ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு புது கண்டிஷன் போட்ட டிரம்ப்..!!

இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை அடுத்து, அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது. அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட்டுள்ளனர்.

டிரம்ப், வெர்சாய்ஸ் அரண்மனையில் நேற்று இரவு நடைபெற்ற இரவு விருந்தின்போது அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தின் அசல் பிரதியிலும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். மேலும், இரவு விருந்து மேசையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருந்த கையெழுத்திடும் நிகழ்வின் காணொளியை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.இதன் மூலம் இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Also Read

இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கம் போல கப்பல்கள் இனி செல்ல முடியும். இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் , எல்பிஜி வரத்து அதிகரித்து அவற்றின் விலை குறையும். அமைதி ஒப்பந்தப்படி இரு நாடுகளும் மோதலை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை இரு தரப்பாலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.

Recommended For You

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே கையெழுத்தாகியுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐநா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளது.இதற்கிடையே ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களுக்கு உடன்படவில்லை என்றால் ஈரான் மிக கடுமையான தாக்குதலை எதிர்கொள்ளும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் புது கண்டிஷன் போட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+