அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது நாள் வரையில் சீனா மீது எவ்விதமான வரிகளையும் விதிக்காத நிலையில் வெள்ளிக்கிழமை அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சீனாவுக்கு எதிரான புதிய வர்த்தக தண்டனைகளை அறிவித்துள்ளார்.
டிரம்ப்-ன் ட்ரூத் சோஷியல் பதிவின் படி அமெரிக்கா சீன பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கும், இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் வரிகளுக்கு மேல் கூடுதலாக அமலாகும். இந்த வரி நவம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படும். சீனா மேலும் தனது ஏற்றுமதி கட்டுப்படுகளை "ஆக்ரோஷமான" முறையில் மேற்கொண்டால், இது முன்கூட்டியே அமலாக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இதோடு, அமெரிக்கா அனைத்து முக்கிய மென்பொருளுக்கும் சீனா மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வாஷிங்டன்-பெய்ஜிங் இடையிலான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கொள்கை பதற்றத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்த இந்தியா மீதே சுத்தி சுத்தி வரியும் கட்டுப்பாடுகளையும் விதித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு வர்த்தக எதிரி, பொருளாதாரத்தில் போட்டி பல முத்திரை குத்தப்பட்ட சீனா மீது எவ்விதமான வரியும் விதிக்கப்படவில்லை.
தற்போது அமெரிக்காவின் இந்த வரி அறிவிப்பின் முக்கிய காரணம், சீனா சமீபத்தில் அரிய உலோக துறையில் கொண்டு வந்த புதிய கட்டுப்பாடுகள் தான். இந்த புதிய கட்டுப்பாட்டால் சர்வதேச வர்த்தகமே பாதிப்படைந்துள்ளது என டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். இது மட்டும் அல்லாமல் உலக நாடுகளை சீனா மீது வரிகளை விதிக்கவும், சீன பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் வலியுறுத்தியுள்ளார் டிரம்ப்.
பிரச்சனையின் ஆரம்பபுள்ளி
சீனா, அரிய உலோக தாதுக்கள் மற்றும் காந்தங்களுக்கு ஏற்கனவே ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. ஆனால், சமீபத்திய அறிவிப்பில், அரிய உலோகங்களை தயாரிப்பதற்கும், பிராசஸ் செய்வதற்கும் தேவையான அனைத்து தொழில்நுட்பங்கள், கருவிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது அரசுகள், சீன அரசிடம் விண்ணப்பித்து அனுமதி பெறாவிட்டால், இந்த தொழில்நுட்பங்களைப் பெற முடியாது. இது, சீனாவின் உலகளாவிய வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முதல் படியாகக் கருதப்படுகிறது.
சீனாவின் வணிக அமைச்சகம், இந்த கட்டுப்பாடுகளை ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது, அது உலகளாவிய பற்றாக்குறையை ஏற்படுத்தியது, இதன் பின்னர் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் மூலம் தீர்க்கப்பட்டது. இதுதான் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் முக்கியமான விஷயமாக இருந்தது.
சீனா, அரிய உலோக தொழில்நுட்பத்தில் உலகளாவிய ஆதிக்கத்தைப் பெற்றுள்ளது. உலக அரிய உலோக சுரங்க உற்பத்தியில் 60 சதவீதம், பிராசஸிங் மற்றும் காந்த உற்பத்தியில் 90 சதவீதம் சீனாவின் பங்காகும்.
சீனாவின் சமீபத்திய கட்டுப்பாட்டு அறிவிப்பில் புதிய 5 அரிய உலோகங்களை ஏற்றுமதி கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்ததுள்ளது. இதில் - ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யிட்டர்பியம் ஆகியவை அடங்கும். இதன் மூலம் 17 அரிய உலோகங்களில் 12-க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய உலோகத்தால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் எலக்ட்ரிக் கார், விமான இன்ஜின்கள், ராணுவ ரேடார்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இதேபோல் சீனா தனது புதிய கட்டுப்பாட்டு அறிவிப்பில், இனி அரிய உலோக காந்தம் பாதுகாப்பு மற்றும் செமிகண்டக்டர் துறைகளுக்கான ஏற்றுமதியை குறைக்கும் என்று அறிவித்துள்ளது. இதுவும் அமெரிக்காவையும், டிரம்ப்-ஐ கோபப்படுத்தியுள்ளது. இதன் விளைவு தான் 100 சதவீத வரி.
More From GoodReturns

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications