டிரம்ப் போட்ட புதிய உத்தரவு.. துரத்தும் வரி அச்சம்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் என்ன பாதிப்பு..?

அமெரிக்க உச்சநீதிமன்ற ரெசிப்ரோக்கல் வரி விதிப்புக்கு எதிராகவும், ரத்து செய்யவும் தீர்ப்பு அளித்த பின்பு, அமெரிக்கா அதிபரான டிரம்ப் திடீரென உலக நாடுகளுக்கு விதித்திருந்த 10% அடிப்படை சுங்கவரியை 15% ஆக உயர்த்தினார். இதன் மூலம் ஏற்கனவே விதிக்கப்பட்ட அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு தற்போது அடிப்படையாக அனைத்து நாடுகளுக்கும் 15 சதவீத வரி விதிக்கப்பட்ட உள்ளது.

பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை அறிவிப்பின் மூலம் இந்த புதிய சுங்கவரி அமலுக்கு வந்ததுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் ஏற்றுமதி வர்த்தக பாதிப்பை மதிப்பீடு செய்து வருகின்றன. குறிப்பாக இந்தியா, அமெரிக்காவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இதன் மூலம் பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளது.

டிரம்ப்-ன் புதிய உத்தரவு, துரத்தும் வரி அச்சம்! தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் என்ன பாதிப்பு?

இந்திய ஏற்றுமதிக்கு என்ன மாற்றம்?
இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக 51 சதவீதமாக இருந்த வரி 18 சதவீதமாக குறைந்தது. இதன் மூலம் அமெரிக்க சந்தைக்கு இந்தியா ஏற்றுமதி செய்த சில பொருட்களுக்கு 18% வரை சுங்கவரி நடைமுறைக்கு வந்தது.

ஆனால் தற்போது 15% என்ற ஒரே அளவிலான உலகளாவிய சுங்கவரி அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. குறிப்பாக டெக்ஸ்டைல், கெமிக்கல், இன்ஜினியரிங் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் போன்ற துறைகளில் இது சாதகமானதாக மாற்றியுள்ளது.

ஆனால் இதுவே நிரந்தர தீர்வா என்ற கேள்வி இன்னும் நிலவுகிறது. ஏனெனில் அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் அடிக்கடி மாற்றம் செய்வது சந்தையில் குழப்பத்தை உருவாக்குகிறது.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை என்ன?
டிரம்ப் "இந்தியாவுடன் இருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றமில்லை" என்று தெரிவித்துள்ளார். "இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு சுங்கவரி செலுத்துவார்கள்; அமெரிக்கா எவ்விதமான வரியும் செலுத்தாது." என்ற அவரது கருத்து, அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இதற்கிடையில், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் கையெழுத்தாகி ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார். இருதரப்பு ஒப்பந்தத்தின் முதல் கட்ட சட்ட விதிகளை இறுதி செய்ய இந்திய குழு பிப்ரவரி 23-26 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவினஅ தலைநகர் வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

ஏற்றுமதியாளர்களின் கவலை என்ன?
இந்திய ஏற்றுமதியாளர்கள் முன்பு 25% சுங்கவரி அடிப்படையில் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு பொருட்களை சப்ளை செய்து வந்தனர். இப்போது அது 15% ஆக குறைந்துள்ளதால், ஏற்கனவே செலுத்திய அதிகப்படியான வரி தொகை ரீபண்ட் கிடைக்குமா என்பது குறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலையுடன் ஏதிர்பார்த்து நிற்கின்றனர்.

அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை?
அமெரிக்கா 1930ஆம் ஆண்டு Tariff Act இன் Section 338-ஐ பயன்படுத்தி, அமெரிக்காவுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நாடுகளுக்கு பதிலடியாத சுங்கவரி விதிக்கலாம் என்பதால் டிரம்ப் அதை பயன்படுத்தி தற்போது 15 சதவீதம் வரையிலான வரியை விதித்துள்ளார். மேலும் 1974 Trade Act இன் Section 301-ஐ பயன்படுத்தி "நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள்" மீது விசாரணை நடத்தி சுங்கவரி விதிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் இவை நீண்டகால விசாரணை மற்றும் நடைமுறைகளை உட்படுத்தும்.

தமிழ்நாடு மீதான தாக்கம்
இந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி துறைக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்னணு உற்பத்திகள் மற்றும் ஐடி சேவைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 15% சுங்கவரி நிலை நீடித்தால், விலை போட்டியில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் உலக நாடுகளுடன் சமநிலையில் போட்டிப்போடும் போது சவால்களை சந்திக்கலாம்.

குறிப்பாக MSME துறையில் செயல்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, ஏற்றுமதி ஆர்டர்கள் மற்றும் லாப விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், 18% என்பதற்குப் பதிலாக 15% என்ற ஒரே சுங்கவரி குறைந்திருப்பது சாதகமான வாய்ப்பை வழங்குகிறது.

அடுத்தது என்ன?
வர்த்தக நிபுணர்கள் கூறுவதாவது, இந்தியா அமெரிக்கா உடனான தனது ஒப்பந்த நிபந்தனைகளை மீண்டும் மதிப்பீடு செய்து தேவையான மாற்றங்களை கோர வேண்டும். ஏனெனில் ஒப்பந்த வடிவமைப்பில், "ஏதேனும் சுங்கவரி மாற்றம் ஏற்பட்டால், இரு நாடுகளும் தங்கள் பொறுப்புகளை மாற்றிக் கொள்ளலாம்" என்ற ஒரு கண்டிஷன் உள்ளது.

மொத்தத்தில், அமெரிக்காவின் 15% சுங்கவரி அறிவிப்பு இந்தியாவுக்கு உடனடி அதிர்ச்சி அல்ல; ஆனால் நீண்டகால வர்த்தகத் திட்டமிடலில் இது முக்கியமான திருப்பமாக அமையும். குறிப்பாக தமிழ்நாடு போன்ற ஏற்றுமதி சார்ந்த மாநிலங்களுக்கு, இந்த மாற்றம் வரவிருக்கும் மாதங்களில் கண்காணிக்க வேண்டிய முக்கிய பொருளாதார சிக்னலாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+